தெலங்கானா மாநிலம் நாகர் கர்னூல் மாவட்டம் வட்டமோன் கிராமத்தில் வசித்து வந்தவர் திருப்பத்தையா (வயது 48). இவர், சொந்த வேலையாக லிங்காளா கிராமத்திற்கு வந்துள்ளார். காலையில் உணவு சாப்பிடாததால், வேலையை முடித்துவிட்டு வரும்போது அதிகம் பசி எடுத்துள்ளது.
இதனால் அங்குள்ள சென்னாம்பள்ளி சதுக்கம் பகுதியில், தள்ளுவண்டி ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட முட்டையை வாங்கி சாப்பிட்டுள்ளார். பசி மயக்கத்தில் அவர் முட்டையை முழுவதுமாக வாயில் திணித்து சாப்பிட முயன்றுள்ளார். இதனால் முட்டை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டு முதியவர் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள், அவரை காப்பாற்ற முயற்சித்த நிலையில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த லிங்காளா காவல்துறையினர், விரைந்து வந்து திருபத்தையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது. முதியவர் சாப்பிட்ட முட்டை, அவரின் தொண்டையில் சிக்கியதால் உயிரிழப்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. அவசரத்தில் உணவை சாப்பிட்டு, அரக்க பறக்க ஓடுவோருக்கு இந்த சம்பவம் ஓர் எச்சரிக்கைப்பாடமாக அமைந்துள்ளது.
Read More : கடல் மட்டத்திற்கு கீழே இருக்கும் மிக தாழ்வான பகுதி எது தெரியுமா..? பலருக்கும் தெரியாத சுவாரஸ்ய தகவல்..!!