fbpx

சரசரவென குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760க்கு விற்பனை செய்யப்படுகிறது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது..

இந்நிலையில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைவதும் பின்னர் அதிகரிப்பதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. அந்த வகையில் தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது.. நேற்று தங்கம் விலை ஒரு சவரன் ரூ.43,000ஐ கடந்து விற்பனையானதால் நகைப்பிரியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்..

இந்நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.5,345க்கு விற்பனை செய்யப்படுகிறது… இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.42,760க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி 40 காசு குறைந்து ரூ.74.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.74,600-க்கு விற்பனையாகிறது..

Maha

Next Post

இனி ஆண்டுக்கு ஒருமுறை ரீசார்ஜ் செய்தால் போதும்.. பி.எஸ்.என்.எல். வழங்கும் அசத்தல் திட்டம்..

Fri Jan 27 , 2023
தொலை தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு தங்கள் வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு மாதாந்திர திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் மலிவு விலையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. மற்ற நிறுவனங்களை விட குறைவான விலையில் ரீசார்ஜ் திட்டங்களை வழங்குவதால். பலரும் பிஎஸ்.என்.எல் சிம்மை 2-வது சிம்-ஆக பயன்படுத்துகின்றனர்.. இந்நிலையில் பிஎஸ்.என்.எல் நிறுவனம் புதிதாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.. ரூ.1198-க்கு வழங்கப்படும் […]
வெறும் 87 ரூபாய்க்கு தினமும் 1 ஜிபி டேட்டா..!! ஏர்டெல், ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் BSNL..!!

You May Like