நடிகர் நகுல் குறித்து வாஸ்கோடகாமா படத்தின் அசோசியேட் டைரக்டர் ஏ.எம்.சந்துரு பகீர் கிளப்பும் தகவலை கூறியுள்ளார்.
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், “வாஸ்கோடகாமா படத்தில் அசோசியேட் டைரக்டரா 2 வருஷம் ஒர்க் பண்ணேன். கடைசி 10 நாள் இருக்கும்போது, நடிகர் ரகுல் என்னை சூட்டிங்ஸ்பாட்டுக்கு வரவிடல. ஒர்க் பண்ணவும் விடல. டிரைலர்ல என் பேர் போடல. ஆடியோ லாஞ்ச்சுக்கும் என்னைக் கூப்பிடல. படம் ரிலீஸ் ஆச்சு. அதுலயும் என் பெயரை போடல.
நகுல் ஒரு நாள் சூட்டிங்ஸ்பாட்ல என்னை அழைத்து காண்டம் வாங்கி வரச் சொன்னார். இல்ல சார் எனக்கு நிறைய வேலை இருக்குன்னு சொன்னேன். ரொம்ப அர்ஜென்ட். உடனே வாங்கிட்டு வாங்கன்னு சொல்லிட்டு இருந்தாரு. ஆனா, நான் முடியாதுனு சொல்லிட்டு என்னுடைய வேலைய பார்த்துட்டு இருந்தேன். இந்தப் பிரச்சனையை பெரிசுபடுத்த வேண்டாம். அப்படியே முடிஞ்சிடும்னு நினைச்சேன்.
இது நடந்து 10 நாள் கழிச்சி நகுலுக்கிட்ட ‘நான் கதை சொல்ல வரவா’ன்னு கேட்டேன். அவரும் வரச் சொன்னார். நான் பார்வையற்றவர்களுக்காக உலகை வெல்லலாம்னு ஒரு படம் பண்றேன். அதுல நீங்க 10 நாள் நடிச்சிக் கொடுக்கணும்னு கதை சொல்றேன். அவ்வளவு நாள் எல்லாம் சம்பளம் இல்லாம நடிக்க முடியாது. ஒரு நாள் மட்டும்னா கால்ஷீட் தரேன்னு நகுல் சொன்னாரு. எங்கிட்ட இப்படி சொல்லிட்டு வாஸ்கோடகாமா டைரக்டர்கிட்ட ‘சந்துரு ஓயாம தொல்லை பண்ணிக்கிட்டு இருக்காருன்னு சொல்லியிருக்காரு. அவரு சூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்தாருன்னா நான் இனிமே வர மாட்டேன்’னும் சொல்லிருக்காரு. அதுல என்ன பெரிய விஷயம்னா நகுலுக்கு அந்தப் படத்தோட ஹீரோயினா நடிச்ச பிரிகிடா செட்டாகல.
பிரிகிடா கூட அவரோட அப்பாவும் சூட்டிங்ஸ்பாட்டுக்கு வந்தாரு. அது நகுலுக்கு சுத்தமா பிடிக்கல. ‘இவங்க அட்ஜஸ்ட்மண்ட் பண்ண மாட்டாங்க. சுனைனாவ ஹீரோயினா போடுங்க. அவங்க தான் செட்டாவாங்க’ன்னு டைரக்டர்கிட்ட நகுல் சொன்னாரு. கடைசியா ஒரு வாய்ப்பு கொடுப்போம்னு பிரிகிடாவுக்கு கொடுத்தாங்க. அப்பவும் அவங்க அப்பாவோட தான் வந்தாங்க. டைரக்டரும் அட்ஜெஸ்ட்மெண்ட் பத்தி அவங்கக்கிட்ட பேச முடியல. அப்புறம் அவங்களைத் தூக்கிட்டாங்க. அவருக்கு சுனைனாவை ஹீரோயினாக்க பிடிக்கல. அதனால, நகுல் ஆடியோ லாஞ்சுக்கும் வரல. நகுலுக்கு சுனைனா மேல ஆசை. அவங்க கூட ‘காதலில் விழுந்தேன்’ படத்துல ஒர்க் பண்ணிருக்காங்க.
இந்தப் பிரச்சனைக்கு நான் தான் ஆதாரம். ஏன்னா நான் இரண்டு வருஷமா வேலை பண்ணிருக்கேன். சம்பளம் இல்லை. அப்படின்னா எங்கே வேணாலும் இதைப் பத்திப் பேசுவேன் என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறார் அசோசியேட் டைரக்டர் ஏஎம்.சந்துரு.
Read More : தமிழ்நாட்டில் இன்று மிக கனமழை எச்சரிக்கை..!! ரொம்ப பயங்கரமா இருக்கப்போகுது..!! வானிலை மையம் வார்னிங்..!!