கொச்சு பிரேமன் என்ற மேடைப் பெயரால் அன்புடன் அழைக்கப்படும் கே.எஸ்.பிரேம் குமார், நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.
நடிகர் சுவாசக் கோளாறால் பாதிக்கப்பட்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார் இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. நாடக கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய கொச்சு பிரேமன், மஞ்சு வாரியர் மற்றும் ஜெயராம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்த டில்லிவாலா ராஜகுமாரன் (1996) திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
தனது வாழ்நாளில் அவர் சுமார் 250 படங்களில் நடித்துள்ளார் மற்றும் அவரது நகைச்சுவை பாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். குரு (1997), தென்காசிப்பட்டணம் (2000), பாப்பி அப்பாச்சா (2010), மற்றும் லீலா (2016) போன்ற ஹிட் அடித்த படங்களில் நடித்தவர். அவர் கடைசியாக ஒரு பப்படவாடா பிரேமம் (2021) படத்தில் நடித்தார். பிருத்விராஜ், அஜு வர்கீஸ் என பல மலையாள பிரபலங்கள் சமூக வலைதளங்களில் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர்.