fbpx

விசித்ராவின் பாலியல் புகார்..!! சிக்கலில் விஜயகாந்த்..!! கணவர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள நடிகை விசித்ரா, அதில் நடைபெற்ற டாஸ்க் ஒன்றில் தன் வாழ்க்கையில் தான் சந்தித்த கசப்பான சம்பவம் பற்றி பகிர்ந்திருந்தார். விசித்ரா பேசும்போது யார் பெயரையும் குறிப்பிடாவிட்டாலும், நெட்டிசன்கள் அது யார் என்கிற தேடுதல் வேட்டையில் இறங்கினர். பின்னர் அது 2001இல் பாலகிருஷ்ணா உடன் அவர் நடித்த தெலுங்கு படம் என்பதும், விசித்ராவை அறைந்தவர் ஏ.விஜய் என்கிற ஸ்டண்ட் மாஸ்டர் என்பதையும் தேடி கண்டுபிடித்து வைரலாக்கினர்.

அதோடு அந்த சமயத்தில் இதுதொடர்பாக தான் காவல்நிலையம் மற்றும் நடிகர் சங்கத்தில் புகார் அளித்தும் தனக்கு நீதி கிடைக்கவில்லை என கூறிய விசித்ரா, அந்த ஆதங்கத்தில் தான் சினிமாவை விட்டு விலகியதாக தெரிவித்தார். விசித்ரா புகார் அளித்த 2001 சமயத்தில் தமிழ்நாட்டில் நடிகர் சங்க தலைவராக இருந்தவர் விஜயகாந்த் தான். அவர் தலைவராக இருந்தும் இந்த விவகாரத்தில் ஆக்‌ஷன் எடுக்கப்படவில்லையா என்பது தான் பலரது கேள்வியாகவும் இருந்தது. தப்பு நடந்தா படத்தில் மட்டுமல்ல நிஜத்தில் தட்டி கேட்கும் மனிதர் என்கிற பெயரெடுத்த விஜயகாந்த், இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதில் எப்படி விட்டார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்நிலையில், விசித்ராவின் கணவர் இதுகுறித்து பேசியிருக்கிறார். அவர் கூறுகையில், “விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், அப்போது செயலாளர் ஒருவர் இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம் என கூறியதால் தான் இதில் ஆக்‌ஷன் எடுக்கப்படவில்லை. நடிகர் சங்கத்தில் இருந்துகூட தனக்கு சப்போர்ட் கிடைக்கவில்லை என விசித்ரா மிகவும் வருத்தப்பட்டார்.

அவர் சினிமாவை விட்டு விலக அதுவும் ஒரு காரணம் தான் என விசித்ராவின் கணவர் ஷாஜி கூறியுள்ளார். 2001ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவி, நெப்போலியன் மற்றும் எஸ்.எஸ்.சந்திரன் ஆகிய 4 பேர் செயலாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

திமுகவிடம் கூடுதல் தொகுதி கேட்போம்..!! எத்தனை தெரியுமா..? கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி..!!

Fri Nov 24 , 2023
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கேட்போம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”இந்து சமய அறநிலையத்துறை சுதந்திரத்திற்கு முன்பிருந்தே அரசு வசம் தான் இருப்பதாகவும் மன்னர் காலத்திலும் மன்னர் நிர்வாகத்தின் கீழ் தான் கோவில்கள் இருந்ததாகவும் கூறினார். கோவில் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் எதன் அடிப்படையில் கூறினார் என வினவியுள்ளார். சேகர்பாபுவை பார்த்தால் சைவ பழம் […]

You May Like