காதலியுடன் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தபோதே தனது கையை அறுத்துக் கொண்டு காதலன் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் அல்தாப் (30). இவர், மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டுகளாக டெய்லராக வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், அப்தாப்புக்கு பெண் ஒருவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, இருவரும் மாறி மாறி காதலித்து வந்த நிலையில், திடீரென கடந்த மாதம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், அவரது காதலி அல்தாப்பிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார்.
இந்நிலையில், பிப்ரவரி 23ஆம் தேதி தன்னுடைய வீட்டில் இருந்தபடி காதலிக்கு அல்தாப் வீடியோ கால் செய்திருக்கிறார். அப்போது, அவர் வீடியோ காலில் பேசியவாறு, விஷம் குடித்துள்ளார். மேலும், தன்னுடைய கையையும் அறுத்துக் கொண்டார். இதனை வீடியோவாக பதிவு செய்து அவர் தன் காதலிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, அல்தாப் உயிரிழந்ததாக அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அவர் தற்கொலை செய்து கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து அல்தாப்பின் சகோதரி ரேஷ்மா அந்த இளம்பெண் தனது சகோதரனிடம் ரூ.2 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார். இதையடுத்து, அந்தப் பெண், மீது காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More : 8, 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.21,000 சம்பளத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!