ஒன் இந்தியா என்பது ஒரு பன்மொழி செய்தி தளமாகும், இது இந்திய வட்டார மொழிகளில் மில்லியன் கணக்கான மக்களுக்கு செய்திகளை தினமும் வழங்கி வருகிறது. இந்த வரிசையில், ஸ்பார்க் ஒரிஜினல் யூடியூப் சேனலை அந்நிறுவனம் தொடங்கியுள்ளது.
Spark Originals என பெயரிடப்பட்ட இந்த யூடியூப் சேனல், ஒரு AI Driven Production Studio ஆகும். இதன் மூலம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி, ஒடியா, பெங்காலி, குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட நம் இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் ஏஐ வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன. Spark Originals-ல் ஏஐ மற்றும் எடிட்டிங் சாப்ட்வேர் பயன்படுத்தப்பட உள்ளது. இது வீடியோ பார்ப்போருக்கு புதுவித அனுபவத்தை வழங்கும். Life Like Characters, Dynamic Animations, Sketch Style Visuals, Detailed environments உள்ளிட்ட பல அம்சங்களை வழங்க உள்ளது.
முக்கிய அம்சங்கள் என்னென்ன?
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் AI Powered Story telling. வீடியோ மூலம் மக்களுக்கு எளிதாக புரியும்படி சொல்ல வரும் செய்தியை எடுத்துரைப்பது தான் இதன் சிறப்பு. 2வது சிறப்பு என்பது Scene Prototyping. குறைந்த நேரத்தில் தரமான விஷுவலை வழங்க முடியும். லைட்டிங் மற்றும் காம்போசியன்ஸ்களுக்கான நேரத்தை இது குறைக்கிறது. 3வது சிறப்பு என்பது Full Pre Production Support. ஸ்கிரிப்ட் முதல் திரையில் தோன்றும் காட்சி வரை ஒவ்வொரு படிநிலைகளிலும் அதற்கான வழிக்காட்டுதல்கள் என்பது வழங்கப்படும்.
பி2பி (B2B) மற்றும் பி2சி (B2C) :
Spark Originals என்பது பி2பி (B2B) மற்றும் பி2சி (B2C)ஆடியன்ஸ்க்கு ஏற்ப ஏஐ சார்பில் வீடியோக்களை வழங்க உள்ளது. பி2பி போக்கஸ் என்பது AI Driven Proudction Studio. திரைப்பட தயாரிப்பாளர்கள், படைப்பாளிகள் மற்றும் விளம்பரதாரரர்களுடன் இணைந்து டீசர், விளம்பரம் உள்ளிட்டவற்றை சார்ந்த முன்மாதிரி வீடியோக்களை உருவாக்க உள்ளது. பொழுதுபோக்கு, நிதி, விளையாட்டு, தொழில்நுட்பம் கல்வி, லைவ் ஸ்டைல் சார்ந்த துறைகளை மையப்படுத்தி இதில் வீடியோக்கள் உருவாக்கப்பட இருக்கிறது. இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் அனைத்து இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், அரபு, ஸ்பானிஷ், பிரெஞ்சு உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளிலும் ஏஐ வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளன. கஸ்டமர்களின் தேவையை Customise முறையில் நிறைவேற்றி தர உள்ளது.
அடுத்ததா பி2சி ஃபோக்கஸ்.. B2C பிரிவு என்பது அனிமேஷன் முதல் Life like Videos வகையை கொண்டாகும். யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் வீடியோக்கள் இந்த முறையில் உருவாக்கி கொடுக்கப்படும். இந்த பிரிவில் வரும் வீடியோக்கள் மாணவர்களின் கற்கும் திறனை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தும் வகையிலும் அமைய உள்ளது. கிராமம் முதல் உலகளவில் வசிக்கும் மக்களுக்கு புரியும்படி ஸ்டோரி சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த பாரம்பரிய மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் பயன்படுத்தப்பட உள்ளது.
அதன்படி லோக்கல் கிரைம், வரலாற்று நிகழ்வுகள், அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள், சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளிட்ட டாப்பிக்குகளில் வீடியோக்கள் உருவாக்கப்பட உள்ளது. இதுதவிர நல்ல மெசேஜ் உடன் ஊக்கப்படுத்துவது வகையிலான வீடியோக்களை வழங்க உள்ளது. இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு Spark@one.in என்ற மின்னஞ்சலை அணுகலாம்.
Read more : வேன் மீது அதிவேகமாக வந்து மோதிய டிப்பர் லாரி..!! 5 பேர் துடிதுடித்து பலியான சோகம்..!! 20 பேர் காயம்..!!