fbpx

அஷ்டம சனியால் சிக்கித் தவிக்கும் விஜய், அஜித்..!! அட அண்ணாமலையுமா..? எச்சரிக்கும் பிரபல ஜோதிடர்..!!

பொதுவாக ஏழரை சனியை விட அஷ்டமத்து சனி நிறைய கஷ்டங்களைத் தரும். கோச்சார ரீதியாக சனி பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்வதுதான் அஷ்டமத்து சனி. கடக ராசிக்காரர்களுக்கு தற்போது 8ஆம் வீட்டில் பயணம் செய்கிறது சனி பகவான். எனவே, கடக ராசிக்காரர்களுக்கு இது அஷ்டம சனி காலம்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் ராசி கடக ராசி ஆயில்யம் நட்சத்திரம். சிம்ம லக்னம். அவர் கடந்த ஓராண்டு காலமாகவே பேசும் வார்த்தைகளை கவனித்தாலே தெரியும். கூட்டணி கட்சியினரை பற்றி மட்டுமல்லாது ஆளும் கட்சியை பற்றி பேசியும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளார். அண்ணாமலை பேசும் வார்த்தைகள் எல்லாமே ஏதாவது ஒரு பிரச்சனையில்தான் முடிகிறது.

அதே போல நடிகர் விஜய் கடக ராசி பூசம் நட்சத்திரம். லியோ படம் ஆரம்பத்தில் இருந்தே பிரச்சனைதான். லியோ படத்தில் நான் ரெடிதான் வரவா பாடல் வரிகளால் பிரச்சினை உருவானது. இப்போது அவரது படத்தின் ட்ரெய்லரில் பேசியுள்ள ஒற்றை வார்த்தை சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரசிகர்களுக்கு விருந்து படைத்த விஜய் அந்த வார்த்தையை தவிர்த்திருக்கலாம் என்று ரசிகர்களே கூறி வருகின்றனர்.

நடிகர் அஜித் ராசி கடக ராசி பூசம் நட்சத்திரம் அவருக்கும் அஷ்டம சனிதான் நடக்கிறது. அவரது அடுத்த படத்தின் சூட்டிங் தடையாகி வருவதற்கு அஷ்டம சனிதான் காரணம் என்கின்றனர் ஜோதிடர்கள். இந்த தடையும் பிரச்சனையும் எப்போது சரியாகும் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்.

அண்ணாமலை – ஆயில்யம், அஜித் – பூசம், விஜய் – பூசம் மூவருக்கும் அஷ்டம சனி நடந்தாலும், எந்த கிரகத்தால் பிரச்சனை என்பது புரியும். கோச்சார கேது மற்றும் கோச்சார சனியை ஜாதகத்தில் வைத்து பார்த்தால் தெரியும். அண்ணாமலை ஜாதகத்தில் சனி மீது கோச்சார கேது, இது அவருக்கான பணி இயக்கத்தை தடை செய்வதை குறிக்கும். கேதுவின் பெயர்ச்சிக்கு பின் அனைத்தும் சரியாகும்.

விஜய் ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத்தில் கோச்சார கேதுவால் பல சிக்கல்கள். கேதுவின் பெயர்ச்சிக்கு பின் அனைத்தும் சரியாகும். அஜித் ஜாதகத்தில் வக்ர சனி காலமான ஜூன் மாதம் முதல் கோச்சார சனி ஜாதக உச்ச செவ்வாய் நோக்கி நகர்கிறது. சனி வக்ர நிவர்த்தியான நவம்பர் 4ஆம் தேதிக்கு பின் தடை அனைத்தும் சரியாகும் என்று ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன் பதிவிட்டுள்ளார் .

Chella

Next Post

“சார் என்ன ஒன்னும் பண்ணாதீங்க” கெஞ்சிய மாணவி; போதையில் சில்மிஷம் செய்த போலீசார்..

Fri Oct 6 , 2023
திருச்சி காக்கிகள்!திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 17 வயதான உஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அருகில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாமாண்டு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உஷா தனது ஆண் நண்பருடன் முக்கொம்பு பகுதிக்கு சுற்றிப் பார்க்க சென்றுள்ளார். அப்போது, திருச்சி திருவெறும்பூர் காவல் தனிப்படையைச் சேர்ந்த பயிற்சி எஸ்.ஐ சசிக்குமார், காவலர்கள் பிரசாத், சித்தார்த்தன், சங்கர் ராஜபாண்டி ஆகியோர் மது அருந்திக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில், காதலர்கள் […]

You May Like