fbpx

எங்கள் மனங்களை ஆளும் விஜய் அண்ணா..!! நாளைய தமிழகத்தை ஆள நீ வா தலைவனாக..!! தெறிக்கவிடும் அரசியல் போஸ்டர்கள்..!!

நடிகர் விஜய் ஜூன் 22ஆம் தேதியான இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து அரசியல் வசனங்களுடன் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் கவனம் ஈர்த்துள்ளன.

நடிகர் விஜய் மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கியதை தொடர்ந்து, லியோ படத்தின் பாடல் வரிகளும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தினர் “நீ வா தலைவா, இலவச கல்வி தா தலைவா” என்ற வாசகங்களுடன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளில், லியோ படத்தின் முதல் பாடலின் வரியான “நான் ரெடி” என்பது இடம்பெற்றுள்ளது.

அதேபோல், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை குறிக்கும் வகையில், அவரது ரசிகர்கள் திருச்சியில் பலவகையான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். அவை அனைத்திலுமே அரசியல் நெடி என்பது சற்று தூக்கலாக இருக்கிறது. எங்கள் மனங்களை ஆளும் விஜய் அண்ணா, நாளைய தமிழகத்தை ஆள நீ வா தலைவனாக.. விஜய் ரசிகர்களின் இந்த போஸ்டர்களை சற்று கலவரத்துடனேயே கடந்து செல்கின்றனர் திருச்சி மாநகர மக்கள். எதிர்கால தமிழக சட்டமன்றத்தில் ஆளுமையே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, மதுரையிலும் விஜய் ரசிகர்கள் இதேபோன்று சுவரொட்டி ஒட்டியிருந்தனர். அதில், நடிகர் விஜய் 2026-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டு முதலமைச்சராக வேண்டும் என தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தனர். “2026 தமிழக முதல்வரே! எங்கள் தலைமுறையை தலைநிமிர்த்திய தலைவனே!”; “நாளைய தமிழகம் காத்திருக்கிறது அண்ணா!” போன்ற வாசகங்கள் பெரும் கவனம் ஈர்த்துள்ளன.

Chella

Next Post

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் இவர்தானாம்…..! காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த கூட்டணி கட்சி தலைவர்கள்…….!

Thu Jun 22 , 2023
எதிர்வரும் 2024 ஆம் வருடம் நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலை எதிர் கொள்வதற்கு ஆதம் பாஜக தற்போதைய தயாராகிவிட்டது. அதற்கான வேலைகளையும் தொடங்கி விட்டது என்று நான் சொல்ல வேண்டும் மேலும் இந்த முறையும் பிரதமர் நரேந்திர மோடி தான் என பாஜக தரப்பில் பட்டி, தொட்டி எங்கும் இப்போது இருந்து பிரச்சாரம் தொடங்கி விட்டது. ஒருபுறம் பாஜக சுறுசுறுப்பாக நாடக மன்ற வேலைகளை தொடங்கி செய்து கொண்டிருக்கிற […]

You May Like