fbpx

திமுக, பாஜகவை அட்டாக் செய்த விஜய்..!! அதிமுகவை மட்டும் விட்டு வைத்தது ஏன்..? எதிர்காலத்தில் இது நடந்தாலும் நடக்கலாம்..!!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேச்சில் திமுக மற்றும் பாஜகவை மறைமுகமாக விமர்சனம் செய்த அவர், தனது பேச்சில் எங்கும் அதிமுகவை.. எடப்பாடியை விமர்சனம் செய்யவில்லை.. பாராட்டவும் இல்லை.

திமுக பற்றி விஜய் மறைமுகமாக பேசுகையில், யார் அரசியலுக்கு வந்தாலும் இவர்கள் கலர் பூசுகிறார்கள். ஆனால், எனக்கு கலர் அடிக்க முடியாது. அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள். மக்கள் விரோத ஆட்சியை திராவிட மாடல் ஆட்சி என சொல்லி மக்களை ஏமாத்துறீங்க. திராவிட மாடல் என சொல்லிக்கொண்டு ஒரு குடும்ப சுய நலக்கூட்டம் தான் எங்களின் அரசியல் எதிரி.

ஆபாசம், அள்ளு சில்லு எல்லாம் வச்சு அவதூறு பரப்பி இந்த படையை வீழ்த்தலாம்னு நினைச்சுறாதிங்க. திராவிட மாடல் ஆட்சி என்று சொல்லி மக்களை ஏமாற்றுகிறீர்கள். இந்த கலர் அந்த கலர் என்று பூசும் இந்த மோடி மஸ்தான் வேலையை இங்கு எடுபடாது என்று பேசினார். இதையடுத்து, பாஜக பற்றி மறைமுகமாக பேசிய விஜய், பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்றவுடன் ஒரு கும்பல் பெயிண்ட் டப்பாவை கையில் எடுத்து கிளம்பி இருப்பார்கள். பிறப்பொக்கும் எல்லாம் உயிர்க்கும் என்று சொன்னதும். ஒரு கட்சி. ஒரு குரூப் எங்களை எதிர்த்தது.

நமக்கு இன்னொரு எதிரியும் இருக்காங்க. ஊழல் இல்லாத ஆட்சியை கொடுப்போம் என்று கூறியுள்ளோம். இதன் அர்த்தம் என்ன.. முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் தான் இப்ப நம்மை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். முகமுடி போட்ட கரெப்சன் கபடிதாரிகள் அகற்றப்பட வேண்டும். இவர்களை எல்லாம் அகற்ற வேண்டும்” என்றார். மேலும், தனது பேச்சில் எங்கும் அதிமுகவையோ, எடப்பாடி பழனிசாமியையோ விமர்சனம் செய்யவில்லை. அதற்கு சில முக்கிய காரணங்களும் சொல்லப்படுகிறது.

* திமுக இங்கேயும்.. பாஜக மத்தியிலும் ஆட்சியிலும் உள்ளது. இவர்களை மட்டுமே எதிர்க்கலாம் என்று விஜய் நினைத்திருக்கலாம்.

* அதிமுக – எடப்பாடி இப்போது ஆக்டிவாக பெரிதாக அரசியல் செய்வது இல்லை. வரிசையாக 11 தேர்தல்களில் அக்கட்சி தோல்வி அடைந்துள்ளது. இதனால் அவர்களை தவிர்த்திருக்கலாம்.

* எதிர்காலத்தில் தவெக அதிமுகவுடன் கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

* அதிமுகவின் இடத்தை நிரப்பி, திமுகவுக்கு எதிராக 2ஆம் இடத்தை பிடிக்க விஜய் நினைக்கலாம். இதனால் அதிமுக மீது போகஸ் தருவதை விஜய் தவிர்த்திருக்கலாம்.

Read More : விஜய்யின் முதல் மாநாட்டில் மனைவி சங்கீதா எங்கே..? அப்படினா அந்த விஷயம் உண்மையா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

    English Summary

    He indirectly criticized DMK and BJP in Vijay’s speech, but nowhere in his speech did he criticize AIADMK… Edappadi… and did not praise him.

    Chella

    Next Post

    2026-ல் கூட்டணி ஆட்சி... த.வெ.க தலைவர் விஜய்க்கு புதிய தமிழகம் கட்சி வாழ்த்து...!

    Mon Oct 28 , 2024
    New Tamil Nadu party congratulates T.V.K leader Vijay

    You May Like