தமிழக வெற்றிக் கழக விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை என நடிகர் பிரகாஷ் ராஜ் வெளிப்படையாக பேசியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பது மட்டுமின்றி, அவ்வப்போது பொது வெளியில் தனது அரசியல் கருத்துகளையும் பகிர்ந்து வருவார். அந்த வகையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், “விஜய்யை பவன்கல்யாணுடம் மக்கள் அடிக்கடி ஒப்பிட்டு பேசுகிறார்கள். எனக்கு இருவரையுமே 20 ஆண்டுகளுக்கு மேலாக தெரியும். பவன் கல்யாண் அவரது சகோதரர் சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து வந்தவர்.
அதேபோல், விஜய்யின் தந்தை ஒரு பிரபலமான இயக்குனர். அவர் தனது நட்சத்திர அந்தஸ்தைப் பெறுவதற்கு முன்பே விஜய்யை அறிமுகப்படுத்துவதற்காக ஏராளமான படங்களை தயாரித்தார். பவன் கல்யாண் ஒரு தசாப்தத்திற்கு முன்பு அரசியலுக்கு வந்தவர். ஆனால், விஜய் அரசியலுக்கு புதியவர். நான் அவர்களை அறிந்த ஆண்டுகளில், நாங்கள் ஒருபோதும் அரசியல் பற்றி தீவிரமாகப் பேசியதே கிடையாது.
அவர்கள் இருவரும் நடிகர்கள், அதில் தங்களுக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து அரசியலுக்குள் நுழைந்துள்ளனர். இருவரிடமும் தொலை நோக்கு பார்வையையும் இல்லை, பிரச்சனைகள் பற்றிய புரிதலும் இல்லை. மக்கள் மாற்றத்தை விரும்பி வரும் நிலையில், இதுபோன்ற பிரபலங்கள் அரசியலுக்கு வரும்போது, சில வெற்றிகள் கிடைக்கக் கூடும். ஆனால், மீண்டும் அவர்கள் தங்களை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பவன் கல்யாண் தனது சிந்தாந்தத்தில் தெளிவு இல்லாதவர். அவரிடம் நாட்டை எப்படி கொடுக்க முடியும்..?” என்று பேசியுள்ளார்.
விஜய் – பிரகாஷ் ராஜ் படங்கள்
விஜய்யுடன் இணைந்து பிரகாஷ் ராஜ் நடித்த படங்கள் 6 ஆகும். கில்லி (2004), சிவகாசி (2005), போக்கிரி (2007), வில்லு (2009), வாரிசு (2023), ஜனநாயகன் ஆகிய படங்களில் இருவரும் சேர்ந்து பணியாற்றியுள்ளனர்.