விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல.. தமிழ்நாட்டின் புதிய நம்பிக்கை என பிரசாந்த் கிஷோர் பேசியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு தொடக்க விழாவில் பேசிய தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், “தமிழக வெற்றிக் கழகத்தில் இருப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்களாக இருக்கின்றனர். தவெக வெற்றி பெற்றால் அது எனக்கான வெற்றி அல்ல. நீங்கள் செய்யப்போகும் வேலைக்கான வெற்றி.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேர்தல் முடிவுகளில் எனது பணி எதுவும் கிடையாது. தவெக அல்லது விஜய்க்கு வியூகம் அமைக்க இங்கு வரவில்லை. விஜய்க்கு என்னுடைய உதவி தேவையில்லை. விஜய் ஒரு தலைவர் மட்டுமல்ல தமிழ்நாட்டின் நம்பிக்கை.
தமிழ்நாட்டின் வளர்ச்சி மாடலை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். அடுத்தாண்டு தவெக வெற்றி பெற்ற பின், உங்களில் பலர் சட்டசபையில் அமருவீர்கள். வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது போல், அரசியல் ஊழலில் தமிழகம் மேலோங்கி உள்ளது. தமிழ்நாட்டில் லஞ்சம், வாரிசு அரசியல் இல்லை என்றால் மேலும் சிறந்ததாக இருக்கும். மற்ற மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் தான் அரசியல் ஊழல் அதிகமாக உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் ஒரு கட்சி அல்ல. ஒரு புதிய அரசியல் இயக்கம். விஜய், மக்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் கொண்டு வருவார். தமிழக மக்களும் மாற்றத்தை நோக்கி காத்திருக்கின்றனர். புதிய தலைமையை பார்க்க விரும்பும் கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கையாக தவெக உள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தவெகவின் தேர்தல் வெற்றி விழாவில் நான் தமிழில் தான் பேசுவேன்” என்றார்.
Read More : எங்களிடையே பிரச்சனை என பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்..! தவெக விழாவில் ஆதவ் அர்ஜுனா பரபரப்பு பேச்சு..!!