fbpx

சீமானுக்கு சைலண்டாக ஆப்பு வைத்த விஜய்..!! தவெக-வில் இணையும் நாம் தமிழர் நிர்வாகிகள்..? மாநாட்டில் காத்திருக்கும் சர்ப்ரைஸ்..!!

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய நிர்வாகிகள், தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அடுத்தடுத்து வெளியேறி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாம் தமிழரில் இருந்து பலர் வெளியேறி திமுக, அதிமுகவில் இணைந்தனர். இதனால், அக்கட்சி பெரிய பிளவை சந்தித்தது. தற்போது மீண்டும் நாம் தமிழரின் அஸ்திவாரம் ஆட தொடங்கியுள்ளது. அந்த கட்சியில் இருந்து நிர்வாகிகள் வெளியேறும் படலம் மீண்டும் தொடங்கியிருக்கிறது.

விஜய் கட்சியில் இணையும் நாம் தமிழர் நிர்வாகிகள்..?

இப்படிப்பட்ட நிலையில்தான், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் பலரும் வரும் நாட்களில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் எழுந்துள்ளது. நாம் தமிழர் கட்சியில் தற்போது உட்கட்சி மோதல் வெடித்துள்ளது. இதை பயன்படுத்தி நாம் தமிழர் நிர்வாகிகளை விஜய், தனது மக்கள் இழுக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

தவெக மாநாட்டுக்கு போலீஸ் அனுமதி கிடைத்துள்ள நிலையில், விக்கிரவாண்டியில் விரைவில் முதல் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். முக்கியமாக, சில பழைய கைகளை கட்சிக்குள் இழுத்துப் போட முயற்சி செய்து வருகிறார். விஜயின் கட்சியில் 5 முக்கியமான நிர்வாகிகள் சேர உள்ளனர். இதற்கு முன் நடிகர் ஒருவருக்கு ஆதரவாக இருந்த 2 நபர்களும், திமுக அதிமுகவில் இருந்த 2 பேரும் தவெக-வில் இணைய இணைக்கிறார்களாம்.

Read More : உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதி..!! கனமழை கொட்டித் தீர்க்கப் போகுது..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!

English Summary

It has been reported that the executives who left the Naam Tamilar Party are likely to join Tamil Nadu Victory Kazhagam.

Chella

Next Post

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு பண மழை கொட்டப் போகுது..!! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் மெகா பிளான்..!!

Wed Oct 9 , 2024
Udayanidhi Stalin, who is now the Deputy Chief Minister, is said to be giving revolving funds to self-help groups.

You May Like