தமிழ் சினிமாவில் 90-களில் பிரபல இயக்குநராக வலம் வந்த எஸ்.ஏ. சந்திரசேகர், திரைப்படங்களிலும், சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். அந்தவகையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கிழக்கு வாசல் என்னும் சீரியலில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் வில்லனாக நடிக்கும் நாகேஷின் மகன் ஆனந்த் பாபுவை எஸ்ஏசி கோயிலில் வைத்து வெளுத்து வாங்குகிறார். இதற்கு காரணம், தத்தெடுத்து வளர்க்கும் ரேணுகாவை ஆனந்த் பாபுவின் மகளுக்கு திருமணம் செய்து வைக்க எஸ்ஏ சி முடிவெடுக்கிறார்.
ஆனால், பணக்காரராக இருக்கும் ஆனந்த் பாபு ரேணுவை தன்னுடைய வீட்டு மருமகளாக்க முடியாது என கேவலமாக பேசுகிறார். உடனே எஸ்.ஏ.சி. தளபதி விஜய் மனதில் வைத்துக்கொண்டு சீரியல் வசனங்களால் வெளுத்து வாங்கியிருக்கிறார். விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என முதலில் எஸ்ஏசி விரும்பினார். அந்த சமயத்தில் தான் தந்தை எஸ்ஏசிக்கும் மகன் விஜய்க்கும் மோதல் ஏற்பட்டு தற்போது வரை பிரிந்து இருக்கின்றனர். இதனால் கிழக்கு வாசல் சீரியலில் மகனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சந்திரசேகர் பேசியுள்ளார் என்று கருத்துக்கள் பரவி வருகின்றன.
அந்த சீரியலில், ‘ஒருவன் ஓவராக தண்ணி அடித்து விட்டால் போதையில் மயக்க வரும், தலை சுற்றும், என்ன பேசுகிறோம் என்பது கூட தெரியாமல் பேசுவார்கள். அதே மாதிரி தான் இப்பொழுது வசதியான வாழ்க்கை வந்ததும் பணக்காரனாக ஆகிவிட்டாய்.. கண்ணு தெரியாமல் அலைகிறாய்! மனுஷனாக இருந்தால் நன்றி உணர்வுடன் இருக்க வேண்டும். எப்படி இந்த நிலைமைக்கு வந்தோம், எப்படி வளர்ந்தோம், யாரால் வந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்று விஜய்யை தாக்கி தந்தை எஸ்.ஏ.சி. பேசியிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.