fbpx

”விஜய் இந்தியா கூட்டணி வர வேண்டும்”..!! இது எச்சரிக்கையா..? அழைப்பா..? பரபரப்பை கிளப்பிய செல்வபெருந்தகை..!!

இந்துத்துவா சக்தியை அகற்ற வேண்டும் என நினைத்தால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்துள்ளார்.

முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான வாழப்பாடி ராமமூர்த்தியின் பிறந்தநாளையொட்டி, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், “விஜய் அவருடைய மாநாட்டில் மதவாத சக்திகளுக்கு எதிராக செயல்படுவோம் என்றார்.

எதை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் ஒழித்துவிடலாம். ஆனால் இந்துத்துவா சக்திகளையும், மதவாத சக்திகளையும் ஓரங்கட்ட வேண்டும் என்றால் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும். அதுதான், அவருக்கும் நல்லது அவருடைய இயக்கத்துக்கும் நல்லது. இதை நான் நாட்டின் குடிமகனாகச் சொல்கிறேன்” என்று தெரிவித்தார்.

முன்னதாக பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் மக்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சந்திக்க இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்வபெருந்தகை, “காவல்துறை அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. எனவே, அவர் செல்கிறார். அங்கு இருக்கும் மக்கள் பாதிக்கக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு” என்று தெரிவித்தார்.

Read More : ”நான் படிக்கணும்.. என்னை விட்ருங்க”..!! கோர்ட்டில் கதறிய கிரீஷ்மா..!! இளைஞரின் கனவை சிதைத்துவிட்டு நாடகம்..!! தூக்கு தண்டனை கேட்ட அரசு..!!

English Summary

Tamil Nadu Congress leader Selvapperundha has called for Vijay to join the India alliance.

Chella

Next Post

’சாம்பியன்ஸ் டிராஃபி’ விளையாடும் இந்திய அணியில் இந்த வீரர்கள் எங்கே..? கொந்தளிக்கும் ரசிகர்கள்..!! ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்குகள்..!!

Sat Jan 18 , 2025
The Indian team for the Champions Trophy cricket series has been announced.

You May Like