fbpx

“தமிழன் கொடி பறக்கும் நேரம் இது..!!” வேற லெவல் வெறித்தனம்.. தெறிக்க விடும் விஜய் கட்சி பாடல்..!!

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில் கால் பதித்துள்ளார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு விஜய் அறிவித்துள்ளார். இந்நிலையில், கட்சியை பலப்படுத்தும் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ கட்சிக் கொடியினையும், கட்சியின் பாடலையும் இன்று (ஆகஸ்ட் 22) விஜய் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்த கொடியில் வாகை பூவும், 2 யானைகளும் இடம்பெற்றிருந்தனர். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் பாடலும் வெளியானது. பாடலாசிரியர் விவேக வரியில், தமன் இசையில் இந்த பாடல் உருவானது. இந்த கட்சிக் கொடியை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து எளிமையான முறையில் நடைபெற்றது. 

விஜயின் தலைமையில் தவெக நிர்வாகிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நெஞ்சில் கை வைத்து, உறுதி மொழியை விஜய் வாசிக்க, நிர்வாகிக்ள் உறுதிமொழி ஏற்றனர். அதில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன், எல்லோர்க்கும் சம வாய்ப்பு கிடைக்க பாடுபடுவேன், ஒற்றுமை, சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவத்தை பேணிக்காப்பவராக செயல்படுவேன், மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து என்றும் மக்கள் நலச் சேவகராக கடமை ஆற்றுவேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதைத்தொடர்ந்து அவருடைய கட்சி பாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது . அந்த பாடலில் முதலில் போர்க்களத்தில் இருந்து யானை வெளிவருவது போல் இருக்கிறது. அந்தப் பாடலில் தமிழகத்தின் பாரம்பரிய விலங்குகளான ஜல்லிக்கட்டு காளை, புலி மற்றும் யானை போன்ற விலங்குகள் இடம்பெற்றுள்ளது. மேலும் சங்க காலத்தில் போர் நடப்பது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் பைரலாகி வருகிறது.

English Summary

Vijay introduced the official party flag and the party song of Tamil Nadu Vetri Kazhagam today

Next Post

தவெக கட்சிக் கொடியின் அர்த்தம் என்ன தெரியுமா..? இவ்வளவு பெரிய வரலாறே இருக்கா..?

Thu Aug 22 , 2024
The conference is expected to inform about the party's policy and next step.

You May Like