fbpx

பரந்தூர் போராட்டக்குழுவை சந்திக்கிறார் விஜய்..!! போலீசிடம் அனுமதி கேட்டுள்ள தவெக..!! ஏகனாபுரத்தில் புஸ்ஸி ஆனந்த் ஆய்வு..!!

தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக பரந்தூரை சுற்றி 5,100 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. இதனை எதிர்த்து ஏகனாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் 900 நாட்களை தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும், போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

இந்நிலையில், 2026 சட்டப்பேரவை தேர்தலை மனதில் வைத்து விஜய் கட்சியை தொடங்கி செயல்பட்டு வருகிறார். இதற்காக நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கூட பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தவெகவினர் இதுவரை எந்தவிதமான போராட்டத்திலும் பெரிதாக ஈடுபடவில்லை. இதனால் வீட்டில் இருந்து வெளி வராமல் விஜயால் அரசியல் செய்ய முடியாது என்று விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தரப்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் கிராம மக்களை வரும் 19 அல்லது 20 ஆகிய தேதிகளில் ஏதேனும் ஒருநாள் சந்தித்து தவெக தலைவர் விஜய் பேச அனுமதி மற்றும் பாதுகாப்பு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தான், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஏகனாபுரம் சென்றுள்ளார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்களை விஜய் சந்திக்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து புஸ்ஸி ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். கிராம மக்கள் மத்தியில் பேசவும் விஜய் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Read More : Khel Ratna | மனு பாக்கர், குகேஷ் உள்ளிட்ட 4 பேருக்கு கேல் ரத்னா விருது..!! கௌரவித்த குடியரசுத் தலைவர்..!!

English Summary

Tamil Nadu Victory Party General Secretary Pussy Anand has visited Ekanapuram.

Chella

Next Post

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் 10 இணையதளங்களின்.. எலைட் பட்டியலில் Oneindia இணைந்துள்ளது..!!

Fri Jan 17 , 2025
Oneindia Joins Elite List of Top 10 Fastest-Growing Websites Worldwide; Ranks 2nd Among Indian Websites

You May Like