fbpx

பெண்களை ஏமாற்றி பிழைத்த விஜய் கட்சி நிர்வாகி..!! பணம் கேட்டு சென்றால் இப்படியா செய்வது..?

திருவண்ணாமலையில் சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி செய்ததாக நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியின் வீட்டை பாதிக்கப்பட்ட மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக நிர்வாகியான முருகன் என்பவர் சீட்டு நடத்தி வந்துள்ளார். கடந்த 6 ஆண்டுகளாகவே அப்பகுதியில் சீட்டு நடத்தி வந்துள்ளார். சீட்டுக்கான தவணை காலம் முடிந்த நிலையில், பணம் செலுத்தியவர்களுக்கு பணத்தை திருப்பித் தராமல் இழுத்தடித்து வந்துள்ளார் முருகன். இதனால், பாதிக்கப்பட்ட பெண்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், முருகனின் வீட்டை பத்துக்கும் மேற்பட்ட பூட்டுகளைக் கொண்டு பூட்டு போட்டனர்.

அப்போது, பாதிக்கப்பட்டவர்கள் பேசுகையில், ”ஆண்கள் அனைவருக்கும் பணத்தை திருப்பி கொடுத்த விட்ட நிலையில், பெண்களுக்கு மட்டும் பணத்தை தராமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டினர். இது தொடர்பாக காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை புகார் கொடுத்தும், யாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வேதனை தெரிவித்தனர்.

மேலும், பணம் கேட்டுச் சென்றால், பணம் எல்லாம் தர முடியாது, உங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை போலீசாருக்கு கொடுத்தால், ஈஸியாக வெளியே வந்துவிடுவேன் என்று திமிராக பேசுவதாக பாதிக்கப்பட்ட மக்கள் குமுறுகின்றனர். இதற்கிடையே, இந்த போராட்டம் தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு உடனே விரைந்து, பாதிக்கப்பட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதனால், அங்கு சற்று நேரம் சலசலப்பு நிலவியது.

Read More : பிரபல ஐடி நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

Chella

Next Post

17 வருட சட்டப்போராட்டம்!… புகையிலை தொழிலுக்கு நிவாரணம் வழங்கிய உச்சநீதிமன்றம்!

Tue May 7 , 2024
 Tobacco: புகையிலை துறைக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், 17 ஆண்டுகளுக்குப் பிறகு சில நிவாரணங்களை வழங்க உச்ச நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. 2006ஆம் ஆண்டு, புகையிலைப் பொருட்களுக்கு 67% கலால் வரி விதிக்கக் கோரி, மத்திய கலால் துறை ஒரு புகையிலை நிறுவனத்திடம் ₹10 கோடிக்கான கோரிக்கை நோட்டீஸ் அனுப்பியது. மெல்லும் புகையிலை பிராண்டுகள் மற்ற சுவையூட்டப்பட்ட பொருட்களிலிருந்து வேறுபட்டது என்பதால், தனி வகைப்பாடு மற்றும் விலைகள் தேவை என்று தொழில்துறை […]

You May Like