தமிழக வெற்றிக் கழக மாநாட்டுக்கு தமிழகம் முழுவதும் இருந்தே இன்று அதிகாலை முதலே விக்கிரவாண்டிக்கு தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் காலை 11 மணியளவிலேயே மாநாட்டுத் திடலில் இருந்த பார்க்கிங் வசதி நிரம்பியது. இருப்பினும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்கள் வந்த வண்ணமே உள்ளனர். மாநாட்டுத் திடலில் இருந்து 10 கிலோ மீட்டர் தூரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அங்கிருந்து தொண்டர்கள் நடந்து வருகின்றனர்.
வி.சாலை பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலையிலேயே உணவு தீர்ந்துவிட்டதால், அப்பகுதியில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தண்ணீர் தட்டுப்பாடும் நிலவுவதாகத் தெரிகிறது. இது போன்ற பல்வேறு நடைமுறைச் சிக்கல்களையும் கருத்தில் கொண்டு மாலை 6 மணிக்கு மாநாடு தொடங்கவிருந்த நிலையில் மாநாட்டை பகல் 3 மணிக்கே தொடங்கியது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு தொடங்கியது. த.வெ.க. தலைவர் விஜய் மாநாட்டு திடலுக்கு வருகை தந்தார். த.வெ.க. தலைவர் விஜய்யை பார்த்ததும், மாநாட்டு திடலில் கூடியிருந்த தொண்டர்கள், நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். முன்னதாக மாநாடு துவக்கத்தில் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 41 கலைஞர்கள் சேர்ந்து பறையாட்டம், தேவராட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் உள்ளிட்டவை த.வெ.க. மாநாட்டு மேடையில் இடம்பெறுகிறது. மேலும் கோவையை சேர்ந்த 27 பேர் அடங்கிய குழு வள்ளிக்கும்மி ஆட்டம் ஆடுகின்றனர்.
Read more ; சற்று நேரத்தில் தொடங்கும் தவெக மாநாடு..!! 19 தீர்மானங்கள் நிறைவேற போகுது..!!