fbpx

மகாராஜாவாக மிரட்ட போகும் விஜய் சேதுபதி..!! மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு..

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் விஜய் சேதுபதியின் 50 வது படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது..

கோலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, பான் இந்தியா அளவில் மாஸ் காட்டி வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக வெளியான மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற இந்தி படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து மேலும் சில படங்கள் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகவுள்ளன.

இதனிடையில் தனது 50 வது படத்திலும் நடித்து முடித்துள்ளார் விஜய் சேதுபதி. பேஷன் ஸ்டுடியோ நிறுவன தயாரிப்பில் நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் ‘மகாராஜா’ என்ற பெயரில் உருவாகியுள்ள இப்படம் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நடராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ஷுட்டிங் நிறைவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது..

இந்நிலையில் ‘மகாராஜா’ படத்தின் ரிலீஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் மே மாதம் 16 ஆம் தேதி ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதிக்கு ‘மகாராஜா’ கண்டிப்பாக ஹிட் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இயக்குனர் ஆறுமுக குமார் இயக்கத்தில் ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றோம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் இவருக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

Raid: 45 நிமிடம் திக் திக்.‌‌..! திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரி அதிரடி சோதனை...!

Wed Apr 10 , 2024
திருமாவளவன் தங்கியிருந்த இல்லத்தில் வருமான வரி சோதனை நடைபெற்றது. சிதம்பரத்தில் 2 நாட்களாக திருமாவளவன் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் 45 நிமிடம் சோதனை நடத்தினர். எதுவும் சிக்காததால் திரும்பிச்சென்றனர். சிதம்பரம் புறவழிச்சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவரும், தி.மு.க கூட்டணி வேட்பாளருமான தொல்.திருமாவளவன் தங்கியிருக்கும் வீட்டில் வருமான வரித்துறையினர் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர். சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், சிதம்பரம் […]

You May Like