fbpx

“மகளுடன் எப்போதும் என்னால் ரொமான்ஸ் செய்ய முடியாது” ; விஜய் சேதுபதி அளித்த விளக்கம்..

ஹீரோவாக மட்டும் இல்லாமல், வில்லனாகவும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் சிறப்பு தோற்றங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர் தான் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் தமிழில் மட்டும் இல்லாமல், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பிற மொழிகளில் கலக்கிக் கொண்டுள்ளார். தென்மேற்கு பருவக்காற்று மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவருக்கு, தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் எக்கச்சக்கமான ரசிகர்கள் உள்ளனர். தான் நடிக்கும் கதாபாத்திரம் எதுவாக இருந்தாலும் அதற்காக தன்னைத்தானே அர்ப்பணித்து மிகச்சிறந்த நடிப்பை வெளிக்காட்டுபவர் இவர்.

இயக்குனர் SP ஜனநாதன் இயக்கத்தில் 2021ல் வெளியான திரைப்படம் தான் லாபம். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் தன்ஷிகா, சுருதி ஹாசன் போன்ற பலர் நடித்துள்ளனர். முதலில், விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை க்ரித்தி ஷெட்டியை நடிக்க வைக்க முடிவு செய்திருந்தனர். ஆனால், க்ரித்தி ஷெட்டியை விஜய் சேதுபதி ரிஜெக்ட் செய்து விட்டார். அதனால் தான் அந்த கதாபாத்திரத்தில் நடிகை தன்ஷிகா நடித்தார். இதற்க்கு விஜய் சேதுபதி சொன்ன காரணம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

ஆம், அதே 2021ல் தெலுங்கில் வெளியான படம் தான் உப்பெனா. இயக்குனர் புச்சி பாபு சனா இயக்கிய இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த க்ரித்தி ஷெட்டிக்கு விஜய் சேதுபதி தந்தையாக நடித்திருப்பார். இதனால் தான் அவர் லாபம் படத்தில் கீர்த்தி ஷெட்டியை ரிஜெக்ட் செய்ததாக கூறியுள்ளார்.

ஆம், இது குறித்து விஜய் சேதுபதி கூறும்போது, “லாபம் படத்தின் படப்பிடிப்பின் போது தான், உப்பெனா படத்தின் படப்பிடிப்பும் நடந்தது. அப்பாவாக நடிக்கும் அதே பெண்ணுடன் எப்படி ரொமான்ஸ் செய்ய முடியும்?? அதனால் தான் க்ரித்தி ஷெட்டி வேண்டாம் என பட குழுவிடம் கூறினேன் என்று கூறினார். மேலும், என் மகள் வயது தான் க்ரித்தி ஷெட்டிக்கும் இருக்கும், அவரை நான் என் மகளாகத்தான் பார்த்தேன், மகளுடன் எப்போதும் என்னால் ரொமான்டிக்காக நடிக்க முடியாது” என கூறியுள்ளார்.

Maha

Next Post

செப்.30ஆம் தேதி உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இடி மின்னலுடன் கனமழை..!! வானிலை மையம் எச்சரிக்கை..!!

Mon Sep 25 , 2023
வங்கக் கடலில் செப்.30ஆம் தேதி புதிதாக குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடக்கு அந்தமான், அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக சென்னை, […]

You May Like