fbpx

நாடாளுமன்ற தேர்தலில் களமிறங்கும் விஜய்..!! டெல்லி விரையும் விஜய் மக்கள் இயக்கம்..!! வெளியான பரபரப்பு தகவல்..!!

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் உச்சநட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுள்ள நடிகர் விஜய், மக்கள் இயக்கத்தை தொடங்கி பல நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார். பள்ளி மாணவர்களிடத்தில் புத்தக வாசிப்பு திறன் மற்றும் பொதுஅறிவு சிந்தனையை வளர்க்கும் நோக்கில் ‘தளபதி விஜய் நூலகம்’ என்ற திட்டம் தமிழ்நாடு முழுவதும் 21 இடங்களில் துவங்கப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பல இடங்களில் ‘தளபதி விஜய் பயிலகம்’ தொடங்கப்பட்டது.

தொடர்ந்து கல்வி விருது வழங்கும் விழா, மருத்துவ முகாம், புயல் நிவாரணம் போன்றவற்றை செய்துள்ளார். விஜயின் கவனம் அரசியலை நோக்கி திரும்பியுள்ளதாக பேச்சுக்கள் எழுகின்றன. இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்ய விஜய் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கட்சி விரைவில் தொடங்கப்படும் என விஜய் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் தான், பிப்ரவரி 4ஆம் தேதி விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகள், டெல்லி சென்று கட்சியை பதிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், விஜய் தொடங்கும் அரசியல் கட்சி, வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

வாடிக்கையாளர்களே..!! பிப்ரவரியில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!! ரிசர்வ் வங்கி அறிவிப்பு..!!

Sat Jan 27 , 2024
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பிப்ரவரி மாதத்தில் 11 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விடுமுறை தினங்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் உள்ளூர் பண்டிகைகள், முக்கிய திருவிழாக்களை பொறுத்து மாறுபடும். இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளின் செயல்பாட்டை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ரிசர்வ் வங்கி, நடப்பாண்டின் பிப்ரவரி மாதத்தில் வங்கி ஊழியர்களுக்கு வழங்கப்பட உள்ள விடுமுறை குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாத வங்கி விடுமுறை நாட்கள் : 4.02.2024 – […]

You May Like