விஜயின் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ரவீனா விஜய் டிவியில் ஒளிபரப்பான மௌன ராகம் 2 தொடரில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். ராட்சசன் திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்து பெரும் பாராட்டுகளைப் பெற்றவர். இந்தப் படம் அவருக்கு சினிமாவில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து, சின்னத்திரையில் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என தனது திறமையை வெளிப்படுத்தி வந்தார்.
அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்த நிலையில் அதையும் பயன்படுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து அதே விஜய் டிவியில் சிந்து பைரவி என்ற சீரியலில் கமிட் ஆகி இருந்தார். ஆனால், அந்த சீரியலில் அவருக்கு நிகராக மற்றொரு ஹீரோயின் கதாபாத்திரமும் இருந்ததால் அந்த சீரியலில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின.
இதை அடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் சிந்து பைரவி தொடரின் தயாரிப்பாளர் புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகத்தான் ரவீனாவுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் ரெட் கார்டு சர்ச்சைக்கு நடிகை ரவீனா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவர் பேசுகையில் என் மீது கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்டது உண்மைதான். ஆனால் எனக்கு ரெட் கார்ட் எல்லாம் தரப்படவில்லை. அதுபோல கம்ப்ளைன்ட் கொடுக்கப்பட்ட போது பேச்சு வார்த்தை நடத்தி சுமுகமாக முடிஞ்சிடுச்சு.
அதனால் நான் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் தொடர்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியிருக்கிறார். அதுபோல சிந்து பைரவி சீரியலில் இருந்து விலகியதற்கு என்னுடைய பர்சனல் காரணம்தான் வேறு எதுவும் இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறார். மேலும் விரைவில் நான் நடன நிகழ்ச்சி மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடிப்பேன் என்று ரவீனா கூறி இருக்கிறார்.
Read more: உங்கள் நாடகத்திற்காக சட்டசபையை பயன்படுத்தாதீர் முதல்வரே..!! – அண்ணாமலை வேண்டுகோள்