பிரபல சீரியல் இயக்குனர் தாய் செல்வம் உயிரிழந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியின் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருக்கின்றனர். மற்ற தொலைக்காட்சி சீரியல்களை விட விஜய் டிவி சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம்.
💔 உங்களது படைப்புகள் என்றும் எங்கள் மனதில்..#RIPDirectorThaiSelvam#KaathuKaruppu #Thaayumaanavan #KalyanamMudhalKaadhalVarai #MounaRaagam Season 1#NaamIruvarNamakkuIruvar#PaavamGanesan#EeramaanaRojaave Season 2 pic.twitter.com/CYFDVCHnVK
— Vijay Television (@vijaytelevision) December 15, 2022
அந்த வகையில் காத்து கருப்பு, கல்யாணம் முதல் காதல் வரை, பாவம் கணேசன், நாம் இருவர் நமக்கு இருவர், மௌன ராகம், ஈரமான ரோஜாவே 2 போன்ற சிறந்த சீரியல்களை இயக்கியவர் தான் இயக்குனர் தாய் செல்வம். இவர் எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான நியூட்டனின் மூன்றாம் விதி திரைப்படத்தையும் இயக்கியுள்ளார்.
இத்தகைய நிலையில் தாய் செல்வம் தற்போது திடீரென உயிரிழந்துள்ளார். இது குறித்து விஜய் டிவி தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனைய்டுத்து விஜய் டிவி பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தாய் செல்வத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.