fbpx

அரசியலுக்கு ஏற்கனவே அடித்தளம் போட்ட விஜய்..!! திடீரென அந்த வீடியோவை ட்ரெண்டாக்கும் ரசிகர்கள்..!!

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை ஜூன் 17ஆம் தேதி நடிகர் விஜய் நேரில் சந்திக்க உள்ளார். மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா 3 மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ – மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கவுள்ளதாகவும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ”நடிகர் விஜய்யின் உத்தரவுப்படி வரும் 17ஆம் தேதி அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே. convention centre-ல் 2023 ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தளபதி விஜய் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள், ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விஜய் இதனை அரசியலுக்கு வருவதற்கு அடித்தளமாக இதனை செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், தற்போது புதிதாக விஜய் இதனை செய்யவில்லை எனவும் விஜய் பல வருடங்களாக இதனை செய்வதாகவும் அவரது ரசிகர்கள் வீடியோ பகிர்ந்து வருகின்றனர்.

Chella

Next Post

ஓவல் மைதானம் சவாலானதாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் - விராட் கோலி

Wed Jun 7 , 2023
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி முதல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், தற்போது இரண்டாவது முறையாக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி WTC ஃபைனலுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் முதல்முறை தோல்வியடைந்ததை போன்று தற்போதும் நடந்துவிடக்கூடாது என இந்திய அணி வீரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் விராட் கோலி. கடந்த முறை ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில், 3 வருட பெரிய இடைவெளிக்கு பிறகு தனது […]

You May Like