fbpx

2026இல் விஜய் தான் முதல்வர்..!! இதுவே நமது இலக்கு..!! தொண்டர்களுக்கு நம்பிக்கையை விதைத்த புஸ்ஸி ஆனந்த்..!!

நடிகர் விஜய் தன்னுடைய சினிமாவை விட்டு வெளியேறி, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. விஜய்யின் இந்த அதிரடி செயலை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ரஜினி – கமலுடன் ஒப்பிட்டு தளபதியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். காரணம், ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாகவே அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என போக்கு காட்டியது மட்டுமின்றி, அரசியல் குறித்து அறிக்கை உள்ளதாக தெரிவித்த இரு தினங்களுக்கு முன்பு, அரசியல் தனக்கு சரி பட்டு வராது எனக்கூறி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஏமாற்றியவர். ரஜினி அரசியலுக்கு வராததன் காரணம் அவரின் உடல்நிலை என்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட, ரசிகர்களின் எதிர்பாப்பும் ஏக்கமும் சுக்குநூறானது.

விஜய் அரசியல் கட்சி குறித்து அறிவித்த பின்னர் முதல் முறையாக நடந்த பனையூரில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, விஜய் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ரசிகர்களை சந்தித்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 2026-ல் தளபதியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள புஸ்ஸி ஆனந்த், “உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் தான் எல்லாமோ இருக்கிறது. இதற்கு முன்பு நாம் எந்த மாதிரி இருந்தோம், என்பது வேறு இதற்கு மேற்பட்டு தலைவர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்ய போகிறோம். தலைவர் என்கிற பதவி இனி யாருக்கும் இல்லை. 2026ஆம் ஆண்டில் முதலமைச்சராக தலைவரை நாம் அமர வைக்க வேண்டும் என பேசியுள்ளார்” இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Chella

Next Post

வங்கிகளில் கடன் வாங்கப்போறீங்களா..? இந்த கட்டணம் வசூலிப்பது ஏன் தெரியுமா..? ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!!

Fri Feb 9 , 2024
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது நிறைய மறைமுக கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகின்றன. இதுபோன்ற கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பது பொதுவாகவே வாடிக்கையாளர்களின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், மறைமுக கட்டணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கும்போது, கடன் தொகைக்கு வட்டி விகிதம் விதிக்கப்படும். இந்த வட்டித் தொகையுடன் பிராசஸிங் கட்டணம், ஆவணக் கட்டணம் […]

You May Like