fbpx

மருத்துவர் வராததால் விரைந்து சென்று நோயாளிக்கு மருத்துவம் பார்த்த விஜயபாஸ்கர்..!! குவியும் பாராட்டு..!!

விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாலை விபத்துக்குள்ளான நபர் மிகுந்த வலியுடன் மருத்துவருக்காக காத்திருக்கும் செய்தியறிந்து, மருத்துவமனைக்கு விரைந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தீபாவளி திருநாளின் மறுநாள் காலை வழக்கம்போல் மிதிவண்டி பயணம் தொடர்ந்தது. அப்போது, நம் விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சாலை விபத்துக்குள்ளான நபர் மிகுந்த வலியுடன் மருத்துவருக்காக காத்திருக்கும் செய்தியறிந்து, மருத்துவமனைக்கு விரைந்தேன்.

ஆனால், காலை 9.30 வரை மருத்துவர்கள் வருகை தரவில்லை. இடது கையில் எலும்பு முறிவுடன் அவதிப்பட்ட அந்நோயாளிக்கு மருத்துவர் என்ற முறையில் முதலுதவி செய்து, மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன். மக்களின் வலி நிவாரணியாக இரு‌க்க வேண்டிய அரசு மருத்துவமனை, நோயாளிகளின் உயிர் காக்கும் உயரிய நேரத்தை தவற விடுவது வருத்தத்துக்குரியது.

தமிழகம் முழுவதும் இதே நிலைமைதான். நோயாளிக்கு இடது கை முறிவால் வலி; எனக்கும், மக்களுக்கும் மருத்துவர்கள் இல்லாத மன வலி” தமிழக சுகாதாரத்துறைக்கு வாழ்த்துகள்.”” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Chella

Next Post

பண மோசடி..!! வலையில் சிக்கிய நடிகை நமீதாவின் கணவர்..!! நடந்தது என்ன..?

Tue Nov 14 , 2023
பண மோசடி விவகாரத்தில் நடிகை நமீதாவின் கணவருக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் MSME புரொமோஷன் கவுன்சிலிங் என்ற அமைப்பின் பெயரில் நிறுவன உறுப்பினர்கள் உடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தேசிய தலைவரான முத்துராமன் (மதுரை மாவட்டம்), தேசிய செயலாளரான துஷ்யந்த் யாதவ் (பஞ்சாப் மாநிலம்) மற்றும் தமிழகத்தின் தலைவராக இருந்த நமீதாவின் கணவர் வீரேந்திர சவுத்ரி ஆகியோர் கலந்து […]

You May Like