தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பலரும் மருத்துவமனைக்கு சென்று நலம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை சீரானதால், நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக இரவு செய்தி வெளியானது.
ஆனால், அவர் இன்னும் மருத்துவமனையில் தான் சிகிச்சைப் பெற்று வருகிறார். அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படவில்லை. சிலர் தொடர்ந்து வதந்தி பரப்பி வருகின்றனர். தவறான ஒரு தகவலை பரப்பும் முன்பு யாராக இருந்தாலும் தேமுதிக தலைமை கழகத்தை தொடர்பு கொள்ளலாம் என பிரேமலதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.