மறைந்த நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பத்ம பூஷன் விருது.
மறைந்த நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு இந்திய அரசின் உயரிய விருதான பத்மபூஷன் விருதை அறிவித்தது. இன்று தலைநகர் டெல்லியில் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கேப்டன் விஜயகாந்தின் பத்மபூஷன் விருதை அவர் சார்பாக மனைவி பிரேமலதா குடியரசுத் தலைவரிடம் பெற்றுக்கொன்டார் . விருது வழங்கும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
நடிகர் பிரபு வாழ்த்து:
நடிகர் பிரபு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “என் இனிய நண்பர் கேப்டன் விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது கிடைப்பதில் ஒட்டுமொத்த திரையுலகத்துக்கே மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. எங்கள் அன்னை இல்லம் சார்பாக கேப்டன் விஜயகாந்தின் குடும்பத்தினருக்கும் புரட்சிக் கலைஞரின் ரசிகர்களுக்கு வாழ்த்துகள்“ என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.
நடிகர் சத்யராஜ் வாழ்த்து
“இருந்தாலும் மறைந்தாலும் பெயர் சொல்ல வேண்டும். யார் இந்த நபர் என்று ஊர் சொல்ல வேண்டும்“ என்று தனக்கும், விஜயகாந்துக்கும் பிடித்தமான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளை சொல்லி நடிகர் சத்யராஜ் தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார்.