fbpx

ஆக்சிஜன் உதவியுடன் விஜயகாந்த்..!! உடல்நிலையில் பின்னடைவு..? தீவிர சிகிச்சை..!!

விஜயகாந்துக்கு ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், உடல்நலக்குறைவால் சில ஆண்டுகளாக வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால், அவ்வப்போது மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகள் செய்து வருகிறார். வீட்டில் ஓய்வில் இருந்த விஜயகாந்துக்கு இருமல், காய்ச்சல், சளி தொந்தரவுகள் ஏற்பட்டதால் கடந்த மாதம் 18ஆம் தேதி மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) இருக்கும் அவருக்கு, சில நேரங்களில் சுயமாக சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அந்த நேரங்களில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையே, விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. அவரை நுரையீரல் நிபுணர்கள் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு முழுவதுமாக ஆக்சிஜன் உதவியுடன் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Chella

Next Post

பெண்களுக்கு மட்டும் இத்தனை வசதியா?… ஐந்து பென்சன் திட்டங்கள் இதோ!

Sat Dec 9 , 2023
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் நீங்கள் அதிக வருமானம் பெறலாம். SIP திட்டத்தின் கீழ் மாதாந்திர பிரீமியத்தை செலுத்தலாம். அதே நேரத்தில், SWP (Systematic Withdrawal Plan)மூலம், வருமானம் ஈட்ட முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு ஓய்வூதியம் பெறலாம். அடல் பென்சன் யோஜனா ஒரு நல்ல முதலீட்டு விருப்பம் ஆகும் இந்த திட்டம் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்றது. 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் இத்திட்டத்தின் […]

You May Like