தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்படும் என தேமுதிக அறிவித்திருந்தது. இதற்காக சென்னை கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடம் கோயில் போன்றும் மாற்றப்பட்டுள்ளது.
நினைவிடம் வண்ண மலர்களாலும், வண்ண விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விஜயகாந்தின் நினைவு நாளை முன்னிட்டு காலை முதலே தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் குவிந்து வருகின்றனர். மேலும், பேரணிக்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடை மீறி அமைதியான முறையில் பேரணி நடந்து முடிந்தது.
மேலும், விஜயகாந்த் நினைவிடத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் குவிந்து வருவதால், பாதுகாப்பு நடவடிக்கைகளை காவல்துறை தீவிரப்படுத்தியுள்ளது. தேமுதிக தொண்டர்கள் மட்டுமின்றி பொதுமக்கள், இளைஞர்கள், பெண்கள் என பலரும் அதிகாலை முதலே விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்தாண்டு விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் நடந்த போது வானத்தில் கழுகு பறந்தது. அதேபோல், இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில், அவருடைய நினைவிடத்திற்கு மேல் மீண்டும் கழுகு ஒன்று பறந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அனைவரது மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Read More : 2025 புத்தாண்டு கொண்டாட்டம்..!! கடற்கரை சாலையில் நள்ளிரவு 12.30 மணி வரை மட்டுமே அனுமதி..!!