fbpx

விஜயலட்சுமி திடீர் பல்டி..!! நாளை போலீஸ் விசாரணைக்கு ஆஜராகிறார் சீமான்..?

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுடன் திரைப்படத்தில் நடித்தவர் நடிகை விஜயலட்சுமி. 2008இல் சீமான் தன்னை திருமணம் செய்து கொண்டு 3 ஆண்டுகள் கணவன் மனைவியாக வாழ்ந்தோம். பின்னர், அவர் ஏமாற்றிவிட்டார் என 2011இல் விஜயலட்சுமி புகார் அளித்திருந்தார். ஆனால், தனது புகாரை விஜயலட்சுமி திரும்பப் பெற்றுக்கொண்டார்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆண்டுகளுக்கு முன் சொன்ன அதே புகாரை தூசு தட்டி நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீசில் விஜயலட்சுமி புகார் கொடுத்தார். இதற்கு தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார். சென்னை போலீசாரும் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தி, வாக்குமூலம் பதிவு செய்து மருத்துவ பரிசோதனை நடத்தியது. பின்னர் சீமானை விசாரணைக்கு அழைத்து 2 முறை சம்மன் அனுப்பியது. ஆனால், சீமான் ஆஜராகவில்லை.

இதற்கிடையே, புதிய திருப்பமாக நள்ளிரவில் சென்னை வளசரவாக்கம் காவல் நிலையம் சென்ற நடிகை விஜயலட்சுமி, சீமானை எதிர்த்து என்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சென்னை போலீசார் மிகவும் தாமதமாக நடவடிக்கை எடுக்கின்றனர். நான் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். சீமான் பவர்புல் மனிதர். என்னுடைய புகாரை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன் என அதிரடியாக பல்டி அடித்தார். அத்துடன் தாம் பெங்களூர் செல்வதாகவும் அறிவித்துவிட்டு விஜயலட்சுமி புறப்பட்டுப் போய்விட்டார்.

இந்த தொடர் கதையின் அடுத்த அத்தியாயமாக, விஜயலட்சுமி விவகாரத்தில் சென்னை போலீசில் நாளை சீமான் ஆஜராக இருக்கிறார் என அவரது வழக்கறிஞர்கள் தரப்பினர் ஊடகங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை போலீசில் ஆஜராகும் சீமான், விஜயலட்சுமி தம் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டதை சுட்டிக்காட்டுவார் என தெரிகிறது.

Chella

Next Post

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் வாயை பொத்தி கூட்டு பலாத்காரம்..!! போலீஸ் ஸ்டேஷனுக்கு பதறியடித்து ஓடியதால் பரபரப்பு..!!

Sun Sep 17 , 2023
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை அடுத்த காளவாசல் பகுதியில் செங்கல் சூளைகள் இயங்கி வருகிறது. அங்கு வடமாநில தொழிலாளர்கள் தங்கி வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில், அங்கு பணியாற்றி வந்த 30 வயது மதிக்கத்தக்க கணவரை இழந்த பெண் தனது 2 குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் அந்தப் […]

You May Like