fbpx

‘விஜயதரணி காங்கிரசில் இருந்திருந்தால் பெரிய தலைவலியாக இருந்திருப்பார்’..!! ’அவர் போனதே நல்லது’..!! விளாசிய ஈவிகேஎஸ்..!!

“காங்கிரஸ் கட்சியை விட்டு விஜயதரணி விலகியது எங்கள் கட்சிக்குத்தான் நல்லது” என்று ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜதரணி, தனக்கு 6 மாதங்கள் ஆகியும் இன்னும் பதவி வழங்கவில்லை என்று கவலை தெரிவித்திருந்தார். பொது மேடையில் அவர் உட்கட்சி விவகாரத்தைக் கிண்டலாகப் பேசுவதைப் போல பேசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவரது பேச்சை மேடையிலிருந்த அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவைச் சேர்ந்த பலர் ரசிக்கவில்லை. ஆனால், தமிழிசை செளந்தரராஜன் மற்றும் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் விஜயதரணிக்கு விரைவில் பதவி வழங்கப்படும் என தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், விஜயதரணி காங்கிரஸை விட்டு வெளியேறியது தொடர்பாகப் பேசியுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன், ”அவர் கட்சியை விட்டுப் போனது காங்கிரஸ் கட்சிக்கு நல்லது என்றும் விஜயதரணி காங்கிரஸ் கட்சிக்கு நன்றியாக இல்லை” என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ”பாஜகவில் இணைந்த பிறகு விஜயதரணி காணாமல் போய்விட்டார் என்றே நினைத்தேன். சில நாட்களுக்கு முன்னர் தான் அவர் பெயர் வெளியே அடிப்பட்டது. காங்கிரசில் அவருக்கு அதிக மரியாதை கொடுத்து வைத்திருந்தோம். அதை உதறிவிட்டுப் போனார்.

ஒருவிதத்தில் விஜயதரணி காங்கிரசை விட்டுப் போனது கட்சிக்கு நல்லது. அவர் ஒரு கலகம் செய்யும் பெண்மணி. தேவை இல்லாமல் ஏதேனும் சிண்டு மூட்டி விடுவார். ஒரு கட்சிக் கட்டுப்பாட்டுடன் செயல்படமாட்டார். அவர் கட்சியை விட்டுச் சென்றது எங்களுக்கு நல்லதுதான். விஜயதரணி காங்கிரஸுக்கு மணி சங்கர் அய்யர் மூலமாகத்தான் வந்தார். வந்த உடனேயே அவரை எம்.எல்.ஏ. ஆக்கினார்கள். மகிளா காங்கிரஸ் தலைவி பதவி கொடுத்தார்கள். காங்கிரஸ் இவ்வளவு செய்தும் அவர் கட்சிக்கு நன்றி இல்லாமல் செயல்பட்டார்.

இப்படிச் சொல்வதால் மன்னிக்க வேண்டும். ஆனால், அதுதான் உண்மை. அவர் காங்கிரஸில் தொடர்ந்திருந்தால் கட்சிக்குப் பெரிய தலைவலியாக இருந்திருப்பார். பொன் ராதாகிருஷ்ணன் பல ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறார். என் கொள்கைக்கு மாறானவராக இருந்தாலும் அவர் நாகரிகமான நண்பர். அவர், பாஜக பெரியளவில் வளராத காலத்தில் இருந்தே கட்சியில் இருக்கிறார். அவருடன் விஜயதரணியை ஒப்பிடுவது தவறு” என்று கூறியுள்ளார்.

Read More : ரேஷன் அட்டைதாரர்களே..!! இந்த தேதியை மறந்துறாதீங்க..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

English Summary

“Vijayadharani’s departure from the Congress party is good for our party,” said EVKS Ilangovan.

Chella

Next Post

பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மருத்துவமனையில் அனுமதி…!

Thu Sep 12 , 2024
Rashtriya Janata Dal (RJD) leader and former Bihar Chief Minister Lalu Prasad Yadav (76) underwent angioplasty at a Mumbai hospital on Thursday, it was reported.

You May Like