fbpx

விஜயின் கடைசி படத்தின் பெயர் “ஜனநாயகன்”…. வெளியானது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்…!

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் படத்திற்கு ‘ஜன நாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

நடிகர் விஜய் இந்த படத்துடன் திரைத்துறையில் இருந்து விலகுவதாக கடந்த ஆண்டே அறிவித்திருந்தார். அரசியல் கட்சி துவங்கி முழுநேர அரசியல் பணிகளில் ஈடுபட இருப்பதால் இம்முடிவை எடுத்ததாக தெரிவித்திருந்தார். அதனால் ‘தளபதி 69’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்க கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரும் அளவில் இருக்கும் நிலையில் படத்தின் படபடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் குடியரசு தினமான இன்று படத்தின் டைட்டிலை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் படி இந்த படத்திற்கு “ஜனநாயகன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகர் விஜய் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு அரசியல் மாநாடு ஒன்றில் தொண்டர்களுடன் செல்ஃபி எடுப்பது போல ஜனநாயகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அமைந்துள்ளது. விஜய்யின் அரசியல் பயணத்தை குறிக்கும் விதமாகவும் இத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. அனிருத் இசையமைக்கும் இந்தப் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Read more : குடியரசு தின அலங்கார ஊர்தியில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவச்சிலை…!

English Summary

Vijay’s last film is titled “Jananayagan”…. First look poster released…!

Kathir

Next Post

குடியரசு தின அலங்கார ஊர்தியில் மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடாவின் உருவச்சிலை...!

Sun Jan 26 , 2025
Statue of late industrialist Ratan Tata in Republic Day float

You May Like