fbpx

விஜய்யின் தவெக கட்சிக் கொடியில் இடம்பெறும் வாசகம்..!! என்ன தெரியுமா..?

நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்குவதாக அறிவித்தார். 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்தார். கட்சியின் முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ள நிலையில், விக்கிரவாண்டியில் முதல் மாநாடு நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னரே கட்சி கொடியை விஜய் அறிமுகம் செய்வார் என்றும் கூறப்பட்டது.

இதற்கிடையே, தவெக கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் வாகை மலர் இடம்பெறுவது குறித்து விஜய் தரப்பில் ஆலோசனைகள் நடைபெற்று வந்தது. மேலும், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கொடி பறக்கவிடப்பட்டது. அந்த கொடியில் மஞ்சள் நிறத்தில் விஜயின் முகத்துடன் கட்சி கொடி காட்சியளிக்கிறது. ஆனால், இது கட்சிக் கொடி இல்லை என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாளை கட்சிக் கொடி அறிமுக நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு கேட்டு, தவெக தலைவர் விஜய் சார்பில் காவல்துறையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தவெக அறிக்கையில், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற வாசகம் இடம்பெறும். அதை மையமாக வைத்து புதிய கட்சிக்கொடி தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Read More : இந்த வாரம் ஓடிடியில் மாஸாக வெளிவரும் படங்கள்..!! ராயன், கல்கி..!! ரசிகர்கள் செம ஹேப்பி..!!

English Summary

The police have filed a petition on behalf of the Tawa leader Vijay seeking security for the launch of the party flag tomorrow.

Chella

Next Post

வெட்கமா இல்லையா? கள்ளசாராயம் குடித்தவர்களுக்கு ரூ.10 லட்சம்.. இறந்த குழந்தைக்கு 5 லட்சம் கொடுக்க முடியாதா? - நீதிபதி சரமாரி கேள்வி

Wed Aug 21 , 2024
The Madurai branch of the High Court has ordered the government to pay a fine of Rs 5 lakh to the child who died in a wall collapse accident at a Sri Lankan refugee camp near Madurai.

You May Like