விக்ரம் திரைப்படம் 100வது நாள் வெற்றியை அடுத்து போஸ்டர் வெளியிட்டு நடிகர் கமலஹாசன் டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
விக்ரம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 100 நாள் நிறைவடைவதை ஒட்டி தனது ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் நடிகர் கமலஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள குரல் பதிவில் ’’ வணக்கம் , ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் 100வது நாளை எட்டியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாக தழுவிக் கொள்கின்றேன். விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கு இதயம் கனிந்த நன்றிகள் , தம்பி லோகேசுக்கு எனது நன்றியும் , அன்பும் ’’…. என கூறியுள்ளார்.
ஓடிடியில் படம் வெளியானபோதும் மாபெரும் வெற்றியடைந்துள்ளது விக்ரம் படம் . லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் , அனிருத் இசையமைப்பில் திரைப்படம் வெளியானது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்குள்ளாகவே ஓ.டி.டி.தளத்தில் வெளியிடப்பட்டது. இருப்பினும் ரசிகர்கள் கூட்டம் தியேட்டரில் குறையவில்லை. இன்னும் தொடர்ந்து திரையரங்கம் ஹவுஸ் புல்…..