fbpx

உலகம் முழுவதும் வெளியான விக்ரமின் ’தங்கலான்’..!! படம் எப்படி இருக்கு..? ரசிகர்களின் விமர்சனம் இதோ..!!

பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி திருவோத்து, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தங்கலான்’ திரைப்படம், KGF-ல் வாழ்ந்த பழங்குடியினரை மையமாக வைத்தும் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு படமும் சொல்லாத இவர்களின் கதையை படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மூலம் பா.ரஞ்சித் செதுக்கியுள்ளார் என்று கூறலாம்.

இப்படத்தில் விக்ரம் கதாபாத்திரம் காண்போரை மிரட்டும் வகையில் உள்ளது. பழங்குடியினரின் வாழ்வியல், கலாச்சாரம் மற்றும் அவர்களின் உடை என ஒட்டுமொத்தத்தையும் கண்முன் காட்டுகிறது விக்ரமின் கெட்அப். ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம் ஏப்ரல் மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில், சில காரணங்களால், படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. இதையடுத்து, ஆகஸ்ட் 15ஆம் தேதி தங்கலான் திரைப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

படத்தின் ப்ரோமோஷன், ட்ரைலர், இசைவெளியீடு என மிரளவைத்தது தங்கலான் குழு. ரசிகர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. தங்கலான் படம் குறித்து ட்விட்டரில் விக்ரமின் நடிப்பை பலர் பாராட்டி உள்ளனர். படத்தில் அனைவரது நடிப்பையும் வெகுவாக பாராட்டி நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் பா.ரஞ்சிதின் இயக்கம் சிறப்பாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதுவரை தங்கலான் படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களே கிடைத்துள்ளன.

Read More : திடீர் திருப்பம்..!! ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!!

English Summary

Vikram’s getup showcases the whole of tribal life, culture and dress.

Chella

Next Post

'சுதந்திர தின விழா நிகழ்ச்சி' பதக்கம் வென்றவர்களுடன் இரண்டாவது வரிசையில் ராகுல் காந்தி..!!

Thu Aug 15 , 2024
Rahul Gandhi's Independence Day event seating triggers talk, government says...

You May Like