fbpx

நவம்பர் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம்..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நவம்பர் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் குடியரசு தினமான ஜனவரி 26, உலக தண்ணீர் தினமான மார்ச் 22, தொழிலாளர் தினம் மே 1, சுதந்திர தினமான ஆக.15, காந்தி ஜெயந்தியான அக். 2, உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 என மொத்தம் 6 நாட்கள் கிராம சபை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்தாண்டு மக்களவைத் தேர்தல் நடந்ததால் மார்ச் 22, மே 1ஆம் தேதி கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை. இந்நிலையில், நவம்பர், 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தீபாவளிக்கு மறுதினம் என்பதால் நவ.1ஆம் தேதியை விடுமுறையாக அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை ஒத்திவைக்க ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அரசை வலியுறுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில், நவம்பர் 23ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கிராமசபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி 23ஆம் தேதி காலை 11 மணியளவில் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள இடம், நேரம் ஆகியவற்றை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டுமென அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

Read More : வாரத்தில் 2 நாட்கள் தீவிர உடற்பயிற்சி செய்தாலே போதும்..!! 200 வகையான பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம்..!!

English Summary

In Tamil Nadu, it has been announced that the Gram Sabha meeting will be held on November 23.

Chella

Next Post

நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..!! இந்த மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை..!!

Sat Nov 9 , 2024
Heavy to very heavy rain will occur at a few places in Tamil Nadu, according to the Chennai Meteorological Department.

You May Like