fbpx

Election 2024: தேர்தலை புறக்கணித்த 2 கிராம மக்கள்…! என்ன காரணம்…?

திருவள்ளூர் மாவட்டம் குமாரராஜா பேட்டையில், தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர்.

தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஒரேகட்டமாக 39 தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலையில் இருந்து விறுவிறுப்பாக வாக்குப்பதிவுகள் நடந்தன. அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்னதாகவே வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு காலமாக தாமதமானது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் குமாரராஜா பேட்டை வாக்குச்சாவடியில் இதுவரை ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. 976 வாக்காளர்களை கொண்ட குமாரராஜா பேட்டையில், தேர்தலை கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். அதேபோல திருத்தணி அடுத்த குமாரராஜிப்பேட்டை மக்கள் தங்கள் பகுதியில் உள்ள சென்னியம்மன், கொல்லாபுரி அம்மன் கோவிலை அதிகாரிகள் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு பதிவை புறக்கணித்துள்ளனர். இந்த கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அதிகாரிகள் கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Vignesh

Next Post

பெருமழையில் சிக்கிய விஜய்..!! விடிய விடிய காத்திருப்பு..!! பரபரப்புக்கு மத்தியில் வாக்களிக்க வருகை..!!

Fri Apr 19 , 2024
‘The Greatest of All Time’ படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெற்று வரும் நிலையில், இன்று தேர்தலில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சென்னை வந்தடைந்தார். லியோ’ திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘The Greatest of All Time’ படத்தில் நடித்து வருகிறார். இது விஜய்யின் 68-வது படமாகும். இப்படத்தில் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட […]

You May Like