பொதுவாக தானம் செய்வது என்பது எப்போதும் ஒருவருக்கு நன்மையை மட்டுமே ஏற்படுத்தும். ஆனால் ஒரு சில பொருட்களை கண்டிப்பாக தானம் செய்யக்கூடாது என்று ஜோதிட சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட பொருட்களை தானம் செய்வதால் சனிபகவான் கோபத்திற்கு உள்ளாக நேரிடும் என்று நம்பப்பட்டு வருகிறது.
உப்பு – நம் பக்கத்து வீடுகளில் உப்பை கடனாகவோ, தானமாகவோ வாங்கவும், கொடுக்கவும் கூடாது. இவ்வாறு தானம் செய்தால் சனி பகவானின் தாக்கம் நம் குடும்பத்தையும், உப்பை கடனாக வாங்குபவரின் குடும்பத்தையும் நேரடியாக தாக்கும் என்று நம்பப்பட்டு வருகிறது.
இரும்பு – சனிபகவானுடன் இரும்பு தொடர்புடையதாக நம்பப்பட்டு வருகிறது. இதனால் வீட்டில் உபயோகமற்ற இரும்பு பொருட்களையும், பழைய இரும்பு பொருட்களையும் சேர்த்து வைக்கக் கூடாது என்றும், இரும்புப் பொருட்களை ஒருவருக்கு தானமாகவோ, கடனாகவோ வழங்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
எண்ணெய் – ஒருவரிடம் எண்ணெய்யை கடனாக வாங்கும் போது சனி பகவான் தாக்கத்திற்கு உள்ளாகுவார்கள். இதனால் குடும்பத்தினருக்கு பல்வேறு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்.
ஊசி – துணிகள் தைப்பதற்கு பயன்படுத்தப்படும் ஊசியை நம்மிடம் இல்லை என்றால் கடைகளில் சென்று பணம் கொடுத்து மட்டுமே வாங்க வேண்டும். ஊசியை கடனாகவோ, தானமாகவோ வாங்கும்போது சனி பகவானின் கோபத்திற்கு உள்ளாக நேரிடும்.
கைக்குட்டை – ஒருவருக்கு கைக்குட்டை தானமாகவோ, பரிசாகவோ அளிக்க கூடாது. இதனால் உறவு முறிவு ஏற்படும்.
சங்கு – நம்மில் பலரும் வீட்டில் சங்கை வைத்து வழிபட்டு வருவோம். அப்படி சங்கு வீட்டில் இருக்கும்போது அதனை மற்றொருவருக்கு பரிசாகவும், தானமாகவோ வழங்கக்கூடாது. இது குடும்ப ஒற்றுமை பாதிக்கும். மேலும் நோய் நொடி ஏற்படும். இவ்வாறு செய்வது வீட்டில் இருக்கும் லட்சுமியை மற்றவருக்கு கொடுப்பதற்கு சமமாகும் என்று கருதப்பட்டு வருகிறது.