கர்நாடகாவில் கார் ஓட்டுனரை சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் பைக்கில் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது.
பெங்களூருவில் பைக் ஓட்டி செல்லும் நபர், தனது வாகனத்தின் பின்புறம் ஒருவரை சுமார் 1 கி.மீ. தூரம் வரை சாலை வழியாக தரதரவென இழுத்துச் செல்கிறார். அந்த பைக் ஓட்டிச் செல்லும் இளைஞர், முதியவரின் கார் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதனால், காரில் இருந்து கீழே இறங்கிய ஓட்டுனர், பைக்கை ஓட்டி வந்தவரிடம் நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால், அந்த நபர் நிற்காமல் தப்பி சென்றுள்ளார். அவரை பிடிக்கும் நோக்கில் பைக்கின் பின் பகுதியை கார் ஓட்டுனர் பிடித்துள்ளார். இதனால், அவரை சாலையில் இழுத்துக் கொண்டே பைக்கில் சென்றவர் பயணித்துள்ளார்.

மற்றொரு பைக்கில் வந்த நபர் மற்றும் ஆட்டோவில் வந்தவர் உதவியுடன் அந்த பைக் நிறுத்தப்பட்டது. பைக்கில் இழுத்து செல்லப்பட்ட நபரின் ஆடைகள் கிழிந்து இருந்தன. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து, பைக் ஓட்டிச் சென்ற அந்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். விசாரணையில், பைக்கில் இழுத்துச் செல்லப்பட்ட கார் ஓட்டுநர் முத்தப்பா என்பது தெரியவந்தது. பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பைக் ஓட்டிச் சென்ற இளைஞரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்ற செயல்பாடுகளை நிச்சயமாக பொறுத்துக் கொள்ள முடியாது என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.