ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கையை எளிதாக வென்று 8வது முறையாக கோப்பையை கைப்பற்றியது இந்திய அணி. துவக்கத்தில் பல கேள்விகளுடன் ஆசிய கோப்பை போட்டியில் கலந்த இந்திய அணி அனைத்து சவால்களையும் வென்று சாதித்து காட்டியுள்ளது. இதே வேகத்துடன் இன்னும் சில தினங்களில் இந்தியாவில் நடக்க இருக்கும் உலகக்கோப்பையில் பங்குபெற இருக்கிறது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி.
இந்நிலையில் நேற்றைய தினம் ஆசிய கோப்பை வென்ற பிறகு கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் இந்திய வீரர்கள் ஜாலியாக சிரித்து பேசிக்கொண்டிருந்த வீடியோ தற்போது வைரல் ஆகியுள்ளது. அந்த வீடியோவில் இஷான் கிஷன், விராட் கோலி போல நடந்து காட்டினார், இதை திலக் வர்மா, ஷ்ரேயாஸ் ஐயர், விராட், ஷுப்மான் கில் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பார்த்துக் ரசித்தனர். இதை கண்ட கோலி நா எப்போ கைகளை இப்படி வைத்து கொண்டு நடந்தேன் என்பதைப்போல கிண்டலாக நடித்து காட்டினார், இதை கண்டா ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். இந்த வீடியோ தற்போது பலரால் பகிரப்பட்டு வருகிறது.