fbpx

Viral Video | ”சிங்கப்பெண்ணே”..!! வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்த தாய், மகள்..!!

தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவில் பதிவாகியுள்ளது.

அந்த வீடியோவில், முதலில், வீட்டிற்குள் ஹெல்மேட் உடன் நுழைந்த கொள்ளையனை தாய், மகள் இருவரும் கட்டையால் தாக்கி, அவரை கீழே தள்ளி உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினர். பின்னர், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரண்டாவதாக வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையனையும் தாய், மகள் இருவரும் அடித்து வீட்டில் இருந்து வெளியேற்றினர். கொள்ளையனை அக்கம் பக்கத்தினர் பிடிக்க தயங்கினாலும், துணிச்சலாக தாய், மகள் இருவரும் கொள்ளையர்களை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியது சிசிடிவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர்கள் இரண்டு பேரின் துணிச்சலான செயலுக்கு பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையடிக்க முயன்றவர்கள் ​​சுஷில் குமார் மற்றும் பிரேம்சந்திரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், அவர்களை விரட்டி அடித்தது அமிதா மஹ்னோத் மற்றும் அவரது மகள் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் தற்காப்புக் கலையில் திறமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More : BREAKING | தமிழ்நாட்டில் சுங்கக்கட்டணம் அதிரடி உயர்வு..!! ஏப்.1 முதல் அமல்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பு..!!

Chella

Next Post

’டெல்லி அரசியல் எனக்குப் பிடிக்காது’..!! ’2026இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சி உறுதி’..!! அண்ணாமலை சரவெடி..!!

Sat Mar 23 , 2024
டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ”கோவை பாராளுமன்ற தொகுதியில் 3 வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்திற்கும் மறுபுறம் தர்மத்திற்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும் […]

You May Like