பிளே ஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி செல்ல 1 சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்ததை சுட்டிக் காட்டிய விராட் கோலி சில நேரங்களில் 1 சதவிகித வாய்ப்பு கூட போதுமானது என்று கூறியுள்ளார்.
17-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. கேகேஆர், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்த தொடரில் ஆர்சிபி விளையாடிய முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் 10ஆவது இடத்தில் இருந்தது. மேலும் வரிசையாக 6 போட்டிகளில் தோல்வி அடைந்து மோசமான சாதனை படைத்திருந்தது. அதன் பிறகு விளையாடிய 2 போட்டிகளில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 9ஆவது இடம், 7ஆவது இடம், 5ஆவது இடம் என்று அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்று முன்னேறியது.
எனினும், ஆர்சிபி பிளே ஆஃப் சுற்றுக்கு ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு இருந்தது. அதற்கு டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளின் வெற்றி தோல்வி எப்படி அமைகிறது என்பதைப் பொறுத்தும் வாய்ப்பு இருந்தது. இந்நிலையில், சிஎஸ்கே 7 ரன்கள் மட்டுமே எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வி அடைந்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதன் மூலமாக ஆர்சிபி கிடைத்த 1 சதவிகித வாய்ப்பையும் பயன்படுத்தி பிளே ஆஃப் சுற்றுக்கு 4ஆவது அணியாக முன்னேறியது. முதல் 8 போட்டிகளில் 7ல் தோல்வி அடைந்த ஆர்சிபி கடைசியாக விளையாடிய 6 போட்டியிலும் வெற்றி பெற்று கம்பீர தோரணையுடன் பிளே ஆஃப் சுற்றுக்கு வந்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் தான் ஆர்சிபிக்கு இருந்த 1 சதவிகித வாய்ப்பை விராட் கோலி சுட்டிக் காட்டியுள்ளார். இது தொடர்பான விராட் கோலியின் பூமா போஸ்டர் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், ஒரு சதவிகிதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் அந்த ஒரு சதவிகித வாய்ப்பு கூட போதுமானது என்று விராட் கோலி குறிப்பிட்டிருக்கிறார். இது தொடர்பான பூமா போஸ்டர் தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஜெயிலர் படத்திற்கு பின் தனது சம்பளத்தை 30% உயர்த்திய தமன்னா..!