fbpx

விராட் கோலி – கம்பீர் இடையே தொடரும் மோதல்!… 10 ஆண்டுகளாக பகை!… அப்படி என்ன பிரச்சனையா இருக்கும்?

மைதானத்தில் விராட் கோலி – கம்பீர் இருவரும் வார்த்தையால் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஐபிஎல் நிர்வாகம் இருவருக்கும் 100% அபராதம் விதித்துள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்களை சேர்த்தது. எளிய இலக்கை நோக்கி விளையாடிய லக்னோ அணி வீரர்கள், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனால் லக்னோ அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின் மைதானத்தில் இரு அணி வீரர்கள், பயிற்சியாளர்கள் என அனைவரும் ஒருவரை ஒருவர் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலிக்கும், லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மைதானத்தில் இருவரும் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். கோலி-கம்பீரின் வார்த்தை மோதலை கண்ட லக்னோ வீரர் அமித் மிஸ்ரா உடனடியாக குறுக்கிட்டு இருவரையும் தனித்தனியே அழைத்து சென்றார். இதனால் இருவருக்கும் இடையேயான மோதல் தவிர்க்கப்பட்டது.

லக்னோ வீரர் நவீன்-உல்-ஹக், பேட் செய்த போது கோலியுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அதுதான் ஆட்டம் முடிந்த பிறகு கம்பீர் மற்றும் கோலி இடையே வாக்குவாதம் எழ காரணம் என தெரிகிறது. இது தொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. மோதலில் ஈடுப்பட்ட லக்னோ அணி ஆலோசகர் கவுதம் கம்பீர் மற்றும் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு 100% அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

நடத்தை விதிகளை மீறியதற்காக இருவருக்கும் லெவல் 2 போட்டி கட்டணத்தில் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் விராட் கோலியுடன் வார்த்தை மோதலில் ஈடுப்பட்ட லக்னோ வீரர் நவீன் உல் ஹக்கிற்கு 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Kokila

Next Post

வேறொருவருக்கு விற்கபட்ட நாய்!… பழைய உரிமையாளரை தேடி 27 நாட்கள் அலைந்த நெகிழ்ச்சி!

Wed May 3 , 2023
அயர்லாந்தில் புதிய உரிமையாளருக்கு விற்கப்பட்ட கோல்டன் ரெட்ரீவர் நாய் ஒன்று, அதன் பழைய உரிமையாளரைத் தேடி 27 நாட்கள் 64 கி.மீ. தூரம் நடந்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோல்டன் ரெட்ரீவர் வகையை சேர்ந்த கூப்பர் என்ற நாய் வடக்கு அயர்லாந்தின் டைரோன் கவுண்டியில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது. இதையடுத்து தனது புதிய உரிமையாளர் வீட்டிற்கு வந்த உடனேயே காரில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டது. கிட்டத்தட்ட […]

You May Like