சென்னை அணிக்கு எதிரான லீக் போட்டியில் விராட்கோலி கூச்சலிட்டதையடுத்து விதிகளை மீறியதாக 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 16வது சீசனின் 24வது லீக் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர் கான்வே மற்றும் சிவம் துபேவின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர் முடிவில் 226 ரன்கள் குவித்தது. இதையடுத்து 227 எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியின் வீரர் கோலி 6 ரன்களில் அவுட்டானார். இதையடுத்து, கேப்டன் டுபிளஸிஸ் மற்றும் மேக்ஸ்வெல்லும் அதிரடியாக ஆடி 126 ரன்கள் குவித்தனர். இதையடுத்து 20 ஓவர் முடிவில் 218 எடுத்தது. இருப்பினும், 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்றது.
இந்தநிலையில், சென்னை அணியில் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் பேட்டிங் செய்துவிட்டு ஆட்டம் இழந்த போதும், அதைபோல், சிவம் துபே கேட்ச் ஆனபோதும் விராட் கோலி மைதானத்தில் கை தட்டி கூச்சல் போட்டார். இதனை பார்த்த பலருக்கும் ஒரு விக்கெட் தானே அதற்கு ஏன் இப்படி என விராட் கோலியை சமூக வலைத்தளங்களில் டேக் செய்து கேள்வி எழுப்பினார்கள். இதுமட்டுமின்றி, பெங்களூர் அணியின் கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் பேட்டிங் செய்து சிக்ஸர்கள் அடித்துக்கொண்டிருந்தபோதும் டிரெஸ்ஸிங் ரூமில் அமர்ந்திருந்து கொண்டு கூச்சல் போட்டார். இத்தகைய செயலுக்காக விராட் கோலிக்கு ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரது சம்பளத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது.