fbpx

விராட் கோலியும்!… 18-ம் நம்பர் ஜெர்சியின் ரகசியமும்!… நிறைய உணர்வுப்பூர்வ தொடர்பு என நெகிழ்ச்சி!

18 ஜெர்ஸி எண்ணுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு ஒரு உணர்வுப்பூர்வ பந்தம் என விராட் கோலி நிகழ்ச்சி ஒன்றில் நெகிழ்ந்து பேசியுள்ளார்.

இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரரும் உலகில் பல கிரிக்கெட் ரசிகர்களைக் கொண்டவரும், களத்தில் எப்போதும் துறுதுறுவென இருப்பவருமான விராட் கோலி, தற்போதைய கிரிக்கெட்டில் சச்சினுக்கு அடுத்தபடியாக பல சாதனைகள், மற்றும் சதங்களை வைத்துள்ளவர்களில் முக்கியமானவர். கிரிக்கெட்டில் சச்சினுக்கு ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் எப்படியோ அதுபோல, விராட் கோலிக்கு கவர் ட்ரைவ் ஷாட் மிகவும் பிடித்தமான ஒரு ஷாட். களத்தில் எப்போதும் தனது முழு பங்களிப்பையும் வழங்குவதில் விராட்டிற்கு இணை அவர் தான். கிரிக்கெட்டிற்காக, அணிக்காக தன்னையே முழுதாக அர்ப்பணிப்பதில் சிறந்தவர்.

சச்சினின் ஜெர்சி எண் 10-ஐ போல விராட் கோலியின் ஜெர்சி எண் 18 என்பது அனைவரும் அறிந்ததே. அந்த 18 என்ற எண்ணுக்கும் கோலிக்கும் உள்ள சம்பந்தத்தை பற்றி விராட் கோலி சமீபத்தில் வெளிப்படுத்தியுள்ளார். இது பற்றி கோலி கூறும்போது, 18 என்ற எண்ணை நான் தேர்ந்தெடுக்கவில்லை, முதன்முதலில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பெற்ற போது எனக்கு வழங்கப்பட்ட ஜெர்சியில் 18 எண் இருந்தது.
அதன்பிறகு 18 என்ற எண் என் வாழ்வில் முக்கிய இடம்பெற்றுவிட்டது. நான் 2008 இல் இந்திய அணிக்காக முதலில் டெபுட் ஆகும்போது அன்றைய தினம் ஆகஸ்ட் 18 ஆம் தேதி, என் தந்தை இறந்த தினம் டிசம்பர் 18, என 18 என்ற எண்ணுக்கும் எனக்கும் நிறைய உணர்வுப்பூர்வ தொடர்பு உண்டாகிவிட்டது என விராட் கோலி நெகிழ்ந்து பேசியுள்ளார்.

Kokila

Next Post

சர்க்கரை நோயாளிகளே!... இந்த பழத்தை கண்டிப்பாக சாப்பிடுங்கள்!... நல்ல பலன் கிடைக்கும்!... ஆய்வில் தகவல்!

Fri May 19 , 2023
நீரிழிவு நோய் இருக்கிறது என்றால் கண்டிப்பாக திராட்சை பழத்தை சாப்பிடுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் (IDF) அறிக்கையின்படி, சுமார் 537 மில்லியன் பெரியவர்கள் சர்க்கரை நோயுடன் வாழ்கிறார்கள் மற்றும் 2030 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 643 மில்லியனாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.இந்த நோயானது கணையம் இன்சுலின் உற்பத்தி செய்யத் தவறினால் ஏற்படுகிறது. உற்பத்தி செய்யப்பட்ட இன்சுலினை உடல் சரியாகப் […]

You May Like