இந்தியாவில் டாம் (Daam) எனும் ஹேக்கிங் (Hacking) வைரஸ் ஆன்லைனில் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட செல்போன்களில் இருக்கும் பாஸ்வேர்ட்கள் திருடப்பட வாய்ப்புள்ளது
இதுகுறித்து மத்திய அரசு விடுத்துள்ள எச்சரிக்கை குறிப்பில், ஆண்டிராய்டு (Android) போன்களை குறிவைத்து தாக்கும் டாம் என்னும் வைரஸ் (Virus) நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. செல்போன்களில் இன்டர்நெட்டை ஆன் செய்தாலே டாம் வைரஸ் தாக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் பலரது செல்போன்களின் கேமராக்கள் (Camera) தானாகவே செயல்பட்டுள்ளது. அதேபோல கால்ஸ் (Calls) தானாகவே சென்றுள்ளன. இதுகுறித்த அறிந்த தேசிய சைபர் பாதுகாப்பு முகமை, செல்போன் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “ஆண்டிராய்டு போன்களில் பரவிவரும் டாம் வைரஸ் மூலம் செல்போன்களில் இருக்கும் கால் லாக் (Call Logs), எஸ்எம்எஸ் (SMS), கால் ரெக்கார்டிங் (Call Recordings), கான்டாக்ட்ஸ் (Contacts), ஸ்கிரீன்ஷாட் (Screenshots), கேமரா (Camera), பாஸ்வேர்ட்ஸ் (passwords), டவுன்லோடிங்/அப்லோடிங் (Downloading/Uploading) பைல்ஸ் உள்ளிட்டவை ஹேக் (Hack) செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த மால்வேர் (malware) அட்வான்ஸ் என்க்ரிப்ஷன் ஸ்டாண்டர்ட் (advanced encryption standard) மூலம் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், ஆன்டி வைரஸ் (Antivirus) ஆப்ஸ் வைத்திருந்தாலும் செல்போன்களை டாம் வைரஸ் தாக்கக்கூடும்.
ஆகவே, செல்போன் பயன்படுத்தும் மக்கள், போலியான வெப்சைட்களில் இருந்து மெசேஜ் மூலமோ இமெயில் மூலமோ வரும் லிங்க்குகளை தொட வேண்டாம். அதேபோல உங்களிடம் இருக்கும் தேவையற்ற தேர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை அன்இன்ஸ்டால் (Uninstall) செய்து விடுங்கள். புதிதாக நம்பகத் தன்மையற்ற எந்த ஆப்ஸ்களையும் டவுன்லோட் செய்யாதீர்கள். நீங்கள் ஒரு வெப்சைட்டில் இருக்கும் போது தானகவே வேறு வெப்சைட் லிங்க் வரும் வேளையில் அதை கிளிக் செய்வதை தவிருங்கள். அடையாளம் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் மேசேஜ்களில் இருக்கும் எந்த லிங்கையும் கிளிக் செய்து விடாதீர்கள்.
குறிப்பாக, உங்களுக்கு சம்பந்தமே இல்லாத வங்கிகளில் (Banks) இருந்து வரும் லோன் தொடர்பான மெசேஜ்கள், இன்சூரன்ஸ் தொடர்பான மேசேஜ்களை நம்பி திறக்காதீர்கள். அதேபோல நீங்கள் நம்பகமாக பயன்படுத்திவரும் வெப்சைட்டுகளில் “http://bit.ly/ ” “nbit.ly ” மற்றும் “tinyurl.com /” ஆகிய யுஆர்எல்கள் (URL) இடம்பெற்றிருந்தால், அதை தவிர்த்துவிடுங்கள். இவை இல்லாத பட்சத்தில் அதை தொடர்ந்து பயன்படுத்துங்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.