fbpx

நரம்புகளை தாக்கும் வைரஸ்..!! இந்த அறிகுறிகள் இருந்தால் தாமதிக்கதீங்க..!! நான்கே நாட்களில் 3 மடங்கு பாதிப்பு..!!

மகாராஷ்டிர மாநிலம் புனே உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barre Syndrome) என்ற நரம்பியல் கோளாறு கடந்த சில நாட்களாக பரவி வருகிறது. இது, மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம், மூளை மற்றும் முதுகெலும்புக்கு வெளியேவுள்ள நரம்புகளைத் தாக்கும். இந்த நோயால் 73 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளனர்.

Guillain-Barre Syndrome அறிகுறிகள் என்ன..?

* பக்கவாதம்

* சுவாச பிரச்சனை

* பார்வை பிரச்சனைகள்

* பேசுவதில் சிரமம்

* முதுகு அல்லது கால்களின் ஆழமான தசை வலி

இந்த நோய் பாதிப்பு, தற்போது வழக்கத்தை விட அதிகமாக உள்ளதாகவும், 4 நாட்களில் இது 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சுகாதாரத்துறை அதிகாரிகள் வீடு வீடாக சென்று பரிசோதனையைத் தொடங்க உள்ளனர். பாதிக்கப்பட்ட 73 நோயாளிகளில், 44 பேர் புனே கிராமப் பகுதியிலும், 11 பேர் புனே நகராட்சிப் பகுதியிலும், 15 பேர் சின்ச்வாட் நகராட்சிப் பகுதியிலும் உள்ளனர்.

இந்த நோய் பாதிப்பு பாக்டீரியா, வைரஸ் தாக்கத்தால் ஏற்படுகிறது. இதற்கு இதுவரை தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருக்கும்பட்சத்தில், தாமதிக்காமல் உடனே நரம்பியல் மருத்துவரை அணுகினால், குணமடையலாம். அறிகுறிகள் தென்பட்ட உடனே மருத்துவரை அணுகுவது முக்கியம்.

Read More : சென்னை லயோலா கல்லூரியில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! 8, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்..!!

English Summary

A neurological disorder called Guillain-Barre Syndrome has been spreading in the past few days.

Chella

Next Post

புனேவில் வேகமாக பரவும் குய்லின்-பாரே நோய்.. அறிகுறிகள் என்னென்ன..? எப்படி தடுப்பது..?

Sat Jan 25 , 2025
புனேவில் சமீபத்தில் குய்லின்-பாரே நோய் (GBS) பாதிப்பு அதிகரித்து வருகிறது.. சுமார் 70-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரிய வகை நரம்பியல் கோளாறான இந்த GBS பாதிப்பு அவ்வப்போது உலகளவில் ஏற்பட்டாலும், புனேவில் ஏற்பட்ட இந்த திடீர் பரவல் சுகாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கவலை எழுப்பியுள்ளது. அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் இந்த நோய் பரவலுக்கான காரணங்களை ஆராய்ந்து வருகின்றனர். குய்லின்-பாரே நோய்க்குறி என்றால் என்ன? […]

You May Like