fbpx

‘இனி தாய்லாந்து செல்ல விசா தேவையில்லை’..!! வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இலங்கையை தொடர்ந்து மற்றொரு ஆசிய நாடு இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியர்கள் இப்போது 30 நாட்களுக்கு விசா இல்லாமல் தாய்லாந்திற்குச் செல்ல முடியும். இந்த சேவை நவம்பர் 2023 முதல் மே 2024 வரை நீடிக்கும். சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக செப்டம்பரில், சீன சுற்றுலா பயணிகளுக்கான விசா தேவையை தாய்லாந்து ரத்து செய்தது.

தற்போது தாய்லாந்தில் இந்தியர்களுக்கு விசா ஆன் அரைவல் வசதி உள்ளது. அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, ஜனவரி முதல் அக்டோபர் 29ஆம் தேதி வரை மொத்தம் 22 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்திற்கு வந்துள்ளனர். இது நாட்டின் பொருளாதாரத்திற்கு 25 பில்லியன் டொலர்களுக்கு மேல் பங்களிக்கிறது.

தாய்லாந்தின் 4-வது பெரிய மூலச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளதாக தாய்லாந்து அரசின் செய்தித் தொடர்பாளர் சாய் வச்சரோன்கே கூறியுள்ளார். இந்தியாவில் இருந்து இந்தாண்டு சுமார் 12 லட்சம் சுற்றுலா பயணிகள் தாய்லாந்துக்கு சென்றுள்ளனர். இந்தியாவிற்கு முன், தாய்லாந்தின் 3 பெரிய சுற்றுலா ஆதார நாடுகளாக மலேசியா, சீனா மற்றும் தென் கொரியா உள்ளது.

தாய்லாந்து இந்தியர்களின் முக்கிய சுற்றுலாத் தலமாகும். இளைஞர்களின் விருப்பமான இடங்களில் இதுவும் ஒன்று. இங்கு செல்ல பல புகழ்பெற்ற நகரங்கள் உள்ளன. நீங்கள் பாங்காக், ஹுவா ஹின், ஃபூகெட், பட்டாயா நகரம், சியாங் மாய், ஃபை ஃபை தீவு, முயாங் சியாங் ராய், அயுத்தாயா போன்ற நகரங்களுக்குச் செல்லலாம். இது ஒரு தீவு நாடு, எனவே நீங்கள் கடல் மற்றும் கடற்கரைக் காட்சிகளைக் கண்டுகளிக்கலாம்.

Chella

Next Post

தமிழகமே சூப்பர் அறிவிப்பு...! அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கட்டண குறைப்பு..! இன்று முதல் அமல்...

Wed Nov 1 , 2023
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டண குறைப்பு இன்று முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அடுக்குமாடி குடியிருப்புகளில் பொது பயன்பாட்டிற்காக புதிய தாழ்வழுத்த வீதப்பட்டி ID யை மின் கட்டண ஆணை எண் 7 நாள் 09.09.2022ல் உருவாக்கியது. தமிழக முதலமைச்சர் அவர்கள் 18.10.2023 அன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் பொது வசதிகளுக்கான […]

You May Like